ரியல்மி நிறுவனம் தனது 'P' சீரிஸில் 10,000mAh பிரம்மாண்ட பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை இந்த ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
Photo Credit: Realme
10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.
"போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்குது, எப்போ பார்த்தாலும் பவர் பேங்க்-கூடவே சுத்த வேண்டியிருக்கு" அப்படின்னு புலம்புறீங்களா? இனிமே அந்த கவலையே வேண்டாம்! ஏன்னா, ஸ்மார்ட்போன் உலகத்தையே மிரள வைக்கிற அளவுக்கு ரியல்மி (Realme) நிறுவனம் ஒரு 'பேட்டரி அரக்கனை' களமிறக்கப்போறாங்க. ஆமாங்க, 7000mAh-ஐ எல்லாம் தாண்டி, இப்போ 10,000mAh பேட்டரியோட ஒரு புது போன் இந்த மாசமே வரப்போகுது. "இது போனா இல்ல பவர் பேங்க்-ஆ?"ன்னு எல்லாரும் கேக்குற அளவுக்கு ஒரு தரமான சம்பவத்தை ரியல்மி செஞ்சிருக்காங்க. வாங்க, இந்த போன்ல என்னென்ன விசேஷம் இருக்குன்னு பார்ப்போம்!
இந்த போன் பத்தின பேச்சு கடந்த வருஷமே ஆரம்பிச்சிருச்சு. ஆனா இப்போ, RMX5107 அப்படின்ற மாடல் எண் கொண்ட ரியல்மி போன் இந்தியாவோட BIS (Bureau of Indian Standards) தளத்துல அதிகாரப்பூர்வமா பதிவாகியிருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா, இந்த போன் இந்தியாவுக்கு வர்றது 100% கன்பார்ம்! பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) சொல்றபடி பார்த்தா, இந்த ஜனவரி மாசம் கடைசியிலயே இந்த போன் இந்தியாவில லான்ச் ஆகிடும்.
தற்போது கிடைச்சிருக்கற தகவலின்படி, இந்த 10,000mAh பேட்டரி போன் ரியல்மியோட 'P' சீரிஸ் (Realme P Series)-ல தான் அறிமுகமாகும்னு சொல்றாங்க. ஒருவேளை இது Realme P5 Ultra அல்லது P4 Pro Max-ன்னு கூட அழைக்கப்படலாம். சமீபத்துல தான் 7000mAh பேட்டரியோட Realme P4x 5G-யை லான்ச் பண்ணாங்க. இப்போ அடுத்த அஞ்சே மாசத்துல 10,000mAh-க்கு ஜம்ப் பண்ணுறது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.
என்னென்ன சிறப்பம்சங்கள்?
இந்த போனோட "அபௌட் டிவைஸ்" (About Device) ஸ்கிரீன்ஷாட் இப்போ லீக்
● பேட்டரி: 10,001mAh (பார்த்தாலே கண்ணு கட்டுது!)
● RAM: 12GB (கூடவே 14GB வர்ச்சுவல் ரேம் ஆப்ஷனும் இருக்கலாம்)
● ஸ்டோரேஜ்: 256GB மெமரி.
● சாஃப்ட்வேர்: லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7.0.
● டிசைன்: இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், போன் ரொம்ப குண்டா இருக்காதாம். வெறும் 8.5mm தடிமனுடன் தான் வரும்னு சொல்றாங்க. இதுக்கு 'சிலிக்கான்-கார்பன்' (Silicon-carbon) பேட்டரி டெக்னாலஜி தான் காரணம்.
நீங்க ஒரு ஹெவி டிராவலரா? இல்ல ஒரு நாளுக்கு 10 மணிநேரம் கேம் விளையாடுறவரா? அப்படின்னா கண்டிப்பா இந்த போன் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஒரு தடவை சார்ஜ் பண்ணா ஒரு வாரம் கூட தாங்கும்னு எதிர்பார்க்கப்படுது. பட்ஜெட் விலையில (சுமார் ரூ. 16,000 - ரூ. 20,000) இது வந்தா, இந்தியாவில ஒரு மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தும்!
ரியல்மி இந்த போனை ஜனவரி இறுதியில் அறிமுகம் செஞ்சா, இதுதான் இந்தியாவிலேயே மிக அதிக பேட்டரி திறன் கொண்ட மெயின்ஸ்ட்ரீம் ஸ்மார்ட்போனா இருக்கும். "பவர் பேங்க்-ஐ போனோட சேர்த்து கட்டி வச்ச மாதிரி" ஒரு அனுபவம் வேணும்னா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. இந்த 10,000mAh பேட்டரி போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது ரொம்ப ஓவரா இல்ல உண்மையாவே யூஸ்ஃபுல்லா இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench