Photo Credit: Twitter/ Realme
ரியல்மி தரப்பில் புதிதாக ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றன. இதில் டீஸ் செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் அண்மையில் தான் C12, C15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதற்குள்ளாக தற்போது புதிதாக 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை களம் இறக்குகிறது. அதன்படி, ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 7 ஸ்மார்ட்போன்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரியல்மியின் டுவிட்டர் பக்கத்தில் டீசர் வெளியாகியுள்ளது. அதில் Fast, Faster, Fastest, 7astest என்று மட்டும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது சூப்பர் டார்ட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பெர்மானஸைக் குறிக்கிறது. இதனையடுத்து, ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதில் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும், 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் உள்ளது.
Redefining 7astest.
— realme (@realmemobiles) August 26, 2020
Stay Tuned. pic.twitter.com/fYtkgKIIrH
ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெறும் 3 நிமிடங்கள் 3.5 ணமணி நேரங்கள் வீடியோ காலிங், 13.2 மணி நேரங்கள் மியூசிக் ப்ளேபேக் வரை பேட்டரி சக்தி நீட்டிக்கும். .
Your vote, your choice! I am experiencing the speed you've been expecting. We are ready to bring it to you.
— Madhav Faster7 (@MadhavSheth1) August 26, 2020
RT if you want me to kick-start the Faster 7. It's all about 7 now! #BuildingTheFaster7 pic.twitter.com/LDv1ttMeeM
ரியல்மி 7 குறித்து ரியல்மியின் சிஇஓ மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் டீஸ் செய்துள்ளார். இவர் இந்த போனில் விரல் ரேகை சென்சார் எந்தபக்கம் இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் விரல்ரேகை சென்சார் இன்-டிஸ்பிளேயில் வழங்கப்படுகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்