இந்தியாவில் 8000 கடைகளில் விற்பனைக்கு வரவுள்ள 'ரியல்மீ 3 Pro': எப்போது?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 25 மே 2019 13:11 IST
ஹைலைட்ஸ்
  • 'ரியல்மீ 3 Pro' தற்போது கடைகளில் கிடைக்கும்
  • இரண்டு வகைகளில் மட்டுமே கடைகளில் விற்பனையாகவுள்ளது
  • மே 25 முதல் மே 27 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்

இந்தியாவில் ரூபாய் 13,999 விலையிலிருந்தே துவங்கும் ரியல்மீ 3 Pro

'ரியல்மீ 3 Pro' இந்தியாவில் கடைகளில் விற்பனையாகும் என அறிவித்துள்ளது, அந்த நிறுவனம். ஓப்போ நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்த ரியல்மீ நிறுவனம், இன்று இந்தியாவிலுள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சற்று பிரபலமான நிறுவனம். இந்த நிறுவனம், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்தான் 'ரியல்மீ 3 Pro'. பலரின் எதிர்பார்ப்பை பெற்ற இந்த ஸ்மார்ட்போனை, அன்லைன் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு வைத்திருந்த ரியல்மீ நிறுவனம், தற்போது கடைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்த விற்பனை மே 28 துவங்கவுள்ளது.

இந்த நிறுவனத்தின் தகவல்படி, 'ரியல்மீ 3 Pro' இரண்டு வகைகளில் மட்டுமே கடைகளில் விற்பனையாகவுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro 15,999 ரூபாய்க்கும், 6GB RAM + 128GB சேமிப்பு கொண்டு ரியல்மீ 3 Pro 16,999 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது. சாம்பல் (Carbon Grey), ஊதா (Lightning Purple), மற்றும் நீலம் (Nitro Blue) ஆகிய வண்ணங்களில் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீயின் கூட்டணி கடைகளில் மே 25 முதல் மே 27 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ள இந்த நிறுவனம், அப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு வருட நீட்டிப்பு வாரண்டியையும் வழங்கவுள்ளது.

6.3 இன்ச் FHD+ திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் திரையை கொண்டது. இதன் திரை விகிதம் 19.5:9. ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி அமைப்பை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான இரண்டு பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 25 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4,045mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme 3 Pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo V70 FE இந்திய விலை & வெளியீட்டு காலம் லீக்: எதிர்பார்க்கப்படும் விவரங்கள்
  2. Garmin ஸ்மார்ட்வாட்ச்களுக்கு WhatsApp ஆதரவு அறிமுகம்
  3. Powerbeats Pro 2 Nike ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: Apple H2 சிப் மற்றும் ANC வசதியுடன்
  4. Oppo A6s 5G இந்தியாவில் அறிமுகம்: 6,500mAh பேட்டரி, MediaTek Dimensity 6300 சிப்செட் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. OnePlus 15T – சீனாவில் மார்ச் 24 அன்று அறிமுகம்... சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்
  6. Reliance Jio – வெளிநாட்டு பயணிகளுக்கு VoWiFi மூலம் இலவச SMS வசதி
  7. Poco X8 Pro Series இந்தியாவில் அறிமுகம்: 9,000mAh பேட்டரி, 50MP கேமரா – விலை & விவரங்கள் இதோ உங்களுக்காக
  8. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  9. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  10. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.