பிளிப்கார்ட் வழியாக இன்று விற்பனைக்கு வருகிறது Poco X2!

பிளிப்கார்ட் வழியாக இன்று விற்பனைக்கு வருகிறது Poco X2!

Poco X2 பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர் ஆப்ஷனகளில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • X2 இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்
  • இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Poco X2, Atlantis Blue, Matrix Purple, Phoenix Red ஆகியவற்றில் கிடைக்கும்
விளம்பரம்

போகோ பிராண்டால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது ஸ்மார்ட்போனான Poco X2 இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. வாடிக்கையாளர்கள் ஜியோமி ஸ்பின்-ஆஃப் போகோவின் X2 ஸ்மார்ட்போனை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும். X2 இந்தியாவில் பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் Poco X2-வின் விலை, வெளியீட்டு விவரங்கள்: 

இந்தியாவில் Poco X2-வின் அடிப்படை 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 16,999-யாக விலையிடப்படுள்ளது. மேலும், அதன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 19,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

Poco X2 தனது முதல் விற்பனை இன்று பிளிப்கார்ட்டில் (first sale on Flipkart) மதியம் 12 மணிக்கு நடைபெறும். Poco X2-வின் அறிமுக சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடி அடங்கும்.


Poco X2-வின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

Poco X2, MIUI 11 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.67-inch full-HD+ (1080x2340 pixels) RealityFlow 120Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Adreno 618 GPU மற்றும் 8GB of LPDDR4X RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது.

Poco X2 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.89 lens உடன் 64 மெகாபிக்சல் சோனி IMX686 முதன்மை சென்சார்  மற்றும் field-of-view (FoV) of 120 டிகிரி கொண்ட f/2.2 ultra-wide-angle lens உடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/2.4 macro lens உடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் உள்ளது. போனின் முன்புறத்தில் இரட்டை செல்பி கேமரா அமைப்பு உள்ளது. இது 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரைக் கொண்டுள்ளது.

Poco X2, 256GB UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. தவிர, இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை வழங்கும்.

Poco X2, USB Type-C, 3.5mm headphone jack, side-mounted fingerprint சென்சார் மற்றும் IR blaster உடன் வருகிறது.


Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                             

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco X2, Poco, Xiaomi, Poco X2 price in India, Poco X2 specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »