ஜியோமியின் அடுத்த படைப்பான Poco F2 விரைவில் வெளியாகவுள்ளது. டிப்ஸ்டர் பகிர்ந்த ஆவணங்களின்படி, Poco F2 என்ற போனின் வர்த்தக முத்திரையை ஜியோமி தாக்கல் செய்துள்ளது
Poco F1 இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, அதன் தொடர்ச்சி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது
ஜியோமியின் அடுத்த படைப்பான Poco F2 விரைவில் வெளியாகவுள்ளது. டிப்ஸ்டர் பகிர்ந்த ஆவணங்களின்படி, Poco F2 என்ற போனின் வர்த்தக முத்திரையை ஜியோமி தாக்கல் செய்துள்ளது - இது பிரபலமான Poco F ஸ்மார்ட்போனின் தொடர் செயல்பாட்டில் உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
அசல் போக்கோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஒரு வர்த்தக முத்திரை வழங்கப்பட்டது. எனவே அறிவிப்பு அநேகமாக நெருங்கிவிட்டது. GSMArena சனிக்கிழமையன்று ஒரு டிப்ஸ்டரை மேற்கோள் காட்டி அறிக்கை செய்தது.
முன்னதாக, Xiaomi, போகோ துணை பிராண்டை முற்றிலுமாக விலக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன.
ஜூலை 2019-ல், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஜியோமியின் இரண்டு உயர் நிர்வாகிகள் - முன்னாள் உலகளாவிய செய்தித் தொடர்பாளர் டோனோவன் சுங் (Donovan Sung) மற்றும் போகோ பிரிவின் தயாரிப்புத் தலைவர் ஜெய் மணி (Jai Mani) ஆகியோர் நிறுவனத்திலிருந்து விலகினர்.
ட்விட்டர் பதிவின் மூலம் சங் (Sung) இந்த அறிவிப்பை வெளியிட்டார்: "இது ஜியோமியில் எனது கடைசி மாதம். 5 ஆண்டுகள், 80+ நாடுகள், உலகளவில் 260 மில்லியன் + Mi ரசிகர்கள். நான் முதல் முறையாக அமெரிக்காவிற்கு வெளியே ஒரு வெளிநாட்டில் வசிக்கிறேன். இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் பிராண்ட். முற்றிலும் நம்பமுடியாத அணி. ஒவ்வொரு நிமிடமும் நேசித்தேன். அற்புதமான நினைவுகளுக்கு லீஜூன் (Leijun), ஜியோமி (Xiaomi) மற்றும் Mi ரசிகர்களுக்கு நன்றி, "என்று அவர் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple, Amazon, Meta Among US Tech Giants Opposing Jio, Vi’s 6GHz Band Allocation Demand: Report