ஓப்போ, விவோ, ரியல்மி உள்ளிட்ட சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உத்தரபிரதேச மாநில அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலைகளை மூடுகின்றனர். இந்த ஆலைகள் உத்தரபிரதேசத்தின் புறநகரான கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளன. இது ஒரு முழுமையான ஊரடங்கை அறிவிக்கும் கடைசி சில மாநிலங்களில் ஒன்றாகும்.
"எங்கள் கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் செயல்பாடுகள், அரசாங்கத்தின் உத்தரவின் படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அனைத்து Oppo இந்தியா ஊழியர்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று ஓப்போ செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டுள்ளார்.
அறிக்கையின்படி, Vivo-வின் இந்தியா அலுவலகம் தனது 100 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
"சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடு, விவோ வளாகத்தில் உள்ள அனைத்து நபர்களின் வெப்பத் திரையிடல், அத்துடன் செயல்பாடுகளில் உள்ள அணிகள் வீட்டிலிருந்து பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன" என்று விவோ இந்தியா தெரிவித்துள்ளது.
கூடுதலாக, Realme அடுத்த அறிவிக்கும் வரை தொழிற்சாலைகளில் அதன் அனைத்து செயல்களையும் நிறுத்தியுள்ளது.
"ரியல்மி இந்தியா தனது உற்பத்தி நடவடிக்கைகளை உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை முதல் நிறுத்தி வைத்துள்ளது. இது தற்காலிகமாக எங்கள் சரக்கு மற்றும் சந்தையில் வழங்கலை சிறிது நேரம் பாதிக்கும் அதே வேளையில், எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது" என்று ரியல்மி ஒரு அறிக்கையில் கூறியது.
இதற்கிடையில், ஷாவ்மி இந்தியாவின் துணைத் தலைவரும், Xiaomi இந்தியாவின் நிர்வாக இயக்குநருமான மன்குமார் ஜெயின், அதன் நிறுவன அலுவலகங்கள், கிடங்குகள், சேவை மையங்கள், எம்ஐ ஹோம் வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றும் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 87 பேருடன் கேரளா முதலிடத்திலும், 86 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்