இந்த பவர்பேங் ரிவர்ஸ் சார்ஜிங் முறையில், ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமில்லாமல் பிறஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் பயன்படுத்தலாம்
ஒப்போ பவர் பேங்க் 2 மொத்தம் இரண்டு விதமான நிறங்களில் வருகிறது.
ஒப்போ நிறுவனம் 10000mAh சக்தி கொண்ட 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் சூப்பரான பவர்பேங்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஒரு போர்ட்டபிள் பவர்பேங்க் 2 அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி சக்தி 10000mAh ஆகும். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பவர்பேங் ரிவர்ஸ் சார்ஜிங் முறையில், ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமில்லாமல் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் பயன்படுத்தலாம். இதே போல் வேறொரு பவர் பேங்கையும் சார்ஜ் செய்யலாம்.
ஸ்மார்ட்போன்கள், TWS இயர்பட்ஸ்கள் போன்றவற்றையும் சார்ஜ் செய்யலாம். இதற்காக குறைந்த மின்சக்தியை வெளிப்படுத்த வேண்டுமெனில், இதிலுள்ள பவர் பட்டனை இருமுறை தட்டினால் போதும். மின்சக்தி குறைவாக வழங்கும். இதனால், இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகளை பாதுகாப்பாக சார்ஜ் செய்யலாம்.
மிகஎளிதாக, குறைந்த எடையில் இருக்கும் இந்த பவர்பேங்கில் 12 லேயர் ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஓவர் வோலட்டேஜ், வோல்டேஜ் மாற்றம் போன்றவற்றால் பாதி்கப்படாது, ஷார்ட் சர்கியூட் ஆகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ பவர்பேங்கில் USB டைப் A போர்ட் இரண்டும், USB டைப் C போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. டூ இன் ஒன் சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.
ஒப்போ பவர் பேங்க் 2 விலை:
இந்தியாவில் ஒப்போ பவர் பேங்க் 2 இன் விலை 1,299 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு விதமான நிறங்களில் வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். இதனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
பெடரல் வங்கியின் டெபிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போல், ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பவர்பேங்க் வாங்கும் வாடிக்கையாளர்களுகு்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Realme Neo 8 Infinite Edition Launch Timeline, Retail Box Leaked: Expected Specifications, Features
Samsung Galaxy S26 Series Could Support Satellite Voice, Video Calls With Samsung's New Exynos Modem 5410
Amazon Get Fit Days Sale 2026 Announced in India: Check Out Some of the Best Deals