இந்தியாவில் Oppo A5 2020 மீண்டும் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. Oppo A5 2020-யின் 3GB RAM வேரியண்ட் ரூ. 500 விலைக் குறைப்பையும், அதன் 4GB RAM ஆப்ஷன் ரூ. 1,000 விலைக் குறைப்பையும் பெற்றுள்ளது. இது உண்மையில் நிரந்தர விலைக் குறைப்பு என்பதை ஓப்போ, கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. Oppo A5 2020, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது இரண்டாவது விலைக் குறைப்பு ஆகும்.
Oppo A5 2020-யின் விலையை Oppo திருத்தியுள்ளது. போனின் 3GB RAM மாடலின் விலை ரூ. 11,490 மற்றும் 4GB RAM மாடலின் விலை ரூ. 12,990-யாக உள்ளது. விலைக் குறைப்புக்கு முன்பு, போனின் 3GB RAM வேரியண்டின் விலை ரூ. 11,990-யாகவும், அதன் 4GB RAM ஆப்ஷனின் விலை ரூ. 13,990-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இதன் பொருள், 3GB மாடல் ரூ. 500 விலைக் குறைப்புடனும், 4GB மாடல் ரூ. 1,000 விலைக் குறைப்புடனும் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் Oppo website மற்றும் Amazon India-வில் பிரதிபலிக்கின்றன. மேலும், இந்த போன் Mirror Black மற்றும் Dazzling White கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ் தள்ளுபடி, no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் EMI பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீதம் அல்லது ரூ. 1500 உடனடி தள்ளுபடி மற்றும் ஐசிஐசிஐ டெபிட் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் அல்லது ரூ. 1500 உடனடி தள்ளுபடி ஆகியவற்றை அமேசான் வழங்குகிறது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Oppo A5 2020, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.5-inch HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-ல் இருந்து சக்தியை ஈர்க்கிறது. Oppo A5 2020-யின் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜை பிரத்யேக microSD slot வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கூடுதலாக, இந்த போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel monochrome shooter மற்றும் 2-megapixel depth சென்சாருடன் சேர்ந்து 12-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்