இந்தியாவில் Oppo A5 2020-யின் புதிய 6GB RAM வேரியண்ட் ரூ. 14,990-யாக விலையிடப்படுள்ளது.
Oppo A5 2020 6GB RAM வேரியண்ட் இப்போது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கிறது
Oppo, Oppo A5 2020 போனின் புதிய வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo A5 2020-ன் புதிய மாடல் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு 6GB RAM-ஐ பேக் செய்கிறது. இப்போது இந்தியாவில் ரூ. 14,990-யாக விலையிடப்படுள்ளது.
விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, Oppo A5 2020, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இந்த போன் waterdrop notch, 480 nits of peak brightness, 89 percent screen-to-body ratio மற்றும் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass 3+ உடன் 6.5-inch HD+ (720 x 1600pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Oppo A5 2020-ன் குவார்ட் ரியர் கேமரா அமைப்பில், 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel monochrome shooter மற்றும் 2-megapixel depth சென்சார் ஆதரவுடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இது microSD வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. Oppo A5 2020, ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development
Honor Magic 8 Pro Launched Globally With Snapdragon 8 Elite Gen 5, 7,100mAh Battery: Price, Specifications