ஒப்போ நிறுவனத்தில் A5 2020 போன் இன்று விற்பனையைத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன், அமேசான் தளத்திலும் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும். குவாட் கோர் கேமரா, 5000 எம்.ஏ.எச் பேட்டரி, ஆக்டா கோர் ப்ராசஸர் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஒப்போ A5 2020 விலை மற்றும் ஆஃபர்கள்:
3ஜிபி ரேம் வகையின் ஒப்போ A5 2020 போனின் விலை 12,490 ரூபாய் ஆகும். 4 ஜிபி ரேம் வகையின் விலை 13,990 ரூபாய் ஆகும். வெள்ளை மற்றும் மிரர் கருப்பு நிறங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கின்றன. அமேசான் தளம் மூலம் ஆன்லைனிலும், ஆஃப்லைன் கடைகளிலும் A5 2020-ஐ வாங்க முடியும்.
எச்.டி.எப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால், உடனடியாக 5 சதவிகித கேஷ்-பேக் கொடுக்கப்படும். எக்ஸ்சேஞ்சிற்குக் கூடுதலாக 1,500 ரூபாய் தள்ளுபடி உண்டு. 3 மற்றும் 6 மாத தவணைத் திட்டத்தில் போனை வாங்கினால், நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியையும் பெறலாம். ஜியோ சப்ஸ்கிரைபர்களுக்கு பல தள்ளுபடிகள் இருக்கின்றன.
போனை ஆஃப்லைன் மூலம் வாங்கினால் வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை கொடுக்க உள்ளன.
ஒப்போ A5 2020 சிறப்பம்சங்கள்:
டூயல் சிம் கொண்ட ஒப்போ A5 2020, ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் இயங்குகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி, 5000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, A5 2020-ல் பின்புறம் 4 கேமரா செட் அப் பொருத்தப்பட்டுள்ளன. 12 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ர வைடு ஆங்கில் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மோனோக்ரோம் ஷூட்டர், 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமரா ஆகியவை உள்ளன. 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் கூடுதலாக உள்ளது. இதைத் தவிர A5 2020-ல் 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்