விற்பனைக்கு வந்தது Oppo A31 (2020)! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 2 மார்ச் 2020 15:32 IST
ஹைலைட்ஸ்
  • போனின் 6GB RAM ஆப்ஷன் மார்ச் 2-வது வாரத்தில் விற்பனைக்கு வருகிறது
  • இந்த போன் மூன்று பின்புற கேமரா அமைப்பு & 4,230mAh பேட்டரி கொண்டுள்ளது
  • Oppo A31 (2020) வாங்கினால் ரூ.7,050 மதிப்புள்ள ஜியோ பலன்கள் கிடைக்கும்

Oppo A31 (2020) வெளியீட்டு சலுகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் வழியாக ஐந்து சதவீத கேஷ்பேக் அடங்கும்

Oppo A31 (2020) போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல ஆன்லைன் தளங்கள் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. போனின் 4 ஜிபி ரேம் ஆப்ஷன் மட்டுமே தற்போது விற்பனைக்கு உள்ளது. இந்த போன், Mystery Black மற்றும் Fantasy White கலர் ஆப்ஷன்களில் ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் Oppo A31 (2020) விலை, சலுகைகள்:

இந்தியாவில் Oppo A31 (2020) 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.11,490 ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், 4 ஜிபி ரேம் ஆப்ஷன் இ-சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த போன் Amazon India, Flipkart மற்றும் Tata Cliq-லும் Mystery Black மற்றும் Fantasy White கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வெளியீட்டு சலுகைகளில், EMI ஆப்ஷன்களை பயன்படுத்தும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீத கேஷ்பேக் மற்றும் ரூ.7,050 மதிப்புள்ள ஜியோ பலன்கள் ஆகியவை அடங்கும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்குகின்றன.

Oppo A31 (2020) இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இந்த போன் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, 6 ஜிபி ரேம் ஆப்ஷன் மார்ச் இரண்டாவது வாரத்தில் விற்பனைக்கு வரும், மேலும் இந்த வேரியாண்டின் விலை ரூ.13,990 ஆகும்.


Oppo A31 (2020) விவரக்குறிப்புகள்:

Oppo A31 (2020) டூயல்-சிம் (நானோ) ஸ்டால்ஸ்களைக் கொண்டுள்ளது, கலர்ஓஎஸ் 6.1.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20: 9 விகிதத்துடன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது octa-core MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் ஆப்ஷனகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் 128 ஜிபிக்கு அதிகமாக இருக்கும், மேலும் மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி ஸ்டோரேஜை (256 ஜிபி வரை) மேலும் விரிவாக்க முடியும்.

Oppo A31 (2020) மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, அதில் 12 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். போர்டில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. Oppo A31 (2020) 4,230 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, MicroUSB port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.