புதிய வேரியண்டில் விற்பனைக்கு வந்தது ஓப்போ ஏ 31 (2020)!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
புதிய வேரியண்டில் விற்பனைக்கு வந்தது ஓப்போ ஏ 31 (2020)!

ஓப்போ ஏ 31 (2020) இரண்டு நிறங்களில் வழங்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
 • ஓப்போ ஏ 31 (2020) மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது
 • இந்த போன் 6 ஜிபி ரேம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 • இதில் 4,230 எம்ஏஎச் பேட்டரி இருக்கும்

ஓப்போ ஏ 31 (2020) பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் உள்ளது. ஒப்போ இந்த போனை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தியது. இந்த முறை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை சீன நிறுவனம் கொண்டு வருகிறது. இந்த போனில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது.


போனின் விலை:

6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Oppo A31 (2020) விலை ரூ.14,990 ஆகும். இந்த போன் FlipkartAmazon மற்றும் பிற இ-காமர்ஸ் வலைத்தளங்களிலிருந்து கிடைக்கிறது.


போனின் விவரங்கள்:

Oppo ஏ 31 (2020) 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் தவிர, இந்த போனின் பின்புற கேமராவில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செப்த் சென்சார் உள்ளது. போனின் பின்புறத்தில் எல்.ஈ.டி ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் கொண்ட மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி / எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. இந்த போன் 4,230 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. போனின் எடை 180 கிராம் ஆகும்.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
 2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
 3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
 4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
 5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
 6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
 7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
 8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
 9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com