Oppo A31 (2020) பிப்ரவரி 29 சனிக்கிழமை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
Oppo A31 (2020) முதலில் இந்தோனேசியாவில் இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
Oppo A31 (2020) நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஒப்போ போன் இரண்டு தனித்துவமான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. Oppo A31 (2020), 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A31-ல் இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் Oppo A31 (2020)-யின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,490-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.13,990 விலைக் குறியீட்டுன் வருகிறது. 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் பிப்ரவரி 29 சனிக்கிழமையன்று நாட்டில் விற்பனைக்கு வரும், அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும். மேலும், இரண்டு மாடல்களும் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்ஸ் மூலம் Mystery Black மற்றும் Fantasy White கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
Oppo A31 (2020)-ன் துவக்க சலுகைகளில் EMI மற்றும் non-EMI ஆப்ஷன்களுக்கான யெஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஐந்து சதவீத உடனடி கேஷ்பேக் பெறலாம். பிப்ரவரி 29 முதல் மார்ச் 31 வரை அமேசான், பிளிப்கார்ட், டாடா கிளிக், ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் மால் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். மேலும், ஐஎம்ஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு EMI ஆப்ஷன்களை பயன்படுத்தி ஐந்து சதவீத கேஷ்பேக் இருக்கும். இந்த போன் ரூ.7,050 மதிப்புள்ள ஜியோ பலன்களுடன் வருகிறது.
Oppo A31 (2020) முதலில் இந்தோனேசியாவில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு IDR 25,99,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,300) விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
டூயல்-சிம் (நானோ) Oppo A31 (2020) கலர்ஓஎஸ் 6.1.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது மற்றும் 20: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றுடன் 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், போனில் octa-core MediaTek Helio P35 SoC உள்ளது, இது 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் இனைக்கப்பட்டுள்ளது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
Oppo A31 (2020) 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, MicroUSB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. தவிர, இது 4,230 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது, இது "நாள் முழுவதும் பயன்பாட்டை" ஒரே சார்ஜில் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Realme 16 5G With 7,000mAh Battery, MediaTek Dimensity 6400 Turbo SoC Launched: Price, Features
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai