4230mAh பேட்டரியுடன் வெளியானது Oppo A31 (2020)...!

Oppo A31 (2020) IDR 25,99,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,500) விலை மற்றும் இந்தோனேசிய சந்தையில் கிடைக்கிறது.

4230mAh பேட்டரியுடன் வெளியானது Oppo A31 (2020)...!

Oppo A31 (2020), waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • 2015-ல் Oppo A31 அறிமுகமானதில் இருந்து Oppo A31 (2020) வேறுபட்டது
  • இது Fantasy White மற்றும் Mystery Black என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
  • இந்த போனில் மூன்று கேமரா அமைப்பு & ஒரு முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது
விளம்பரம்

புதிய Oppo A31 ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதன் இடைப்பட்ட A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக இருக்கும். புதிய A31, 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A31-ல் இருந்து வேறுபட்டது. புதிய போன் இப்போது இந்தோனேசிய சந்தையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.


Oppo A31-ன் விலை:

Oppo A31 (2020) IDR 25,99,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,500) விலை மற்றும் இந்தோனேசிய சந்தையில் கிடைக்கிறது. இது Lazada, Shopee, Tokopedia, JD.ID, Blibli மற்றும் Akulaku உள்ளிட்ட ஆன்லைன் கடைகள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Mystery Black மற்றும் Fantasy White வண்ணங்களில் வழங்கப்படும்.

இப்போது மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.


Oppo A31-ன் விவரக்குறிப்புகள்:

MediaTek Helio P35 பிராசசரால் இயக்கப்படுகிறது, இந்த டூயல்-சிம் (நானோ) Oppo A31 ஒரு இடைப்பட்ட பட்ஜெட் சாதனமாகும். இந்த போன் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Oppo A31, 6.5-inch HD+ (720x1,600 pixels) திரை, 4230mAh பேட்டரி மற்றும் rear fingerprint சென்சாரை பேக் செய்கிறது. 

Oppo A31 (2020)-ல் உள்ள கேமராக்களுக்கு வருகையில், அவற்றில் மூன்று பின்புறத்திலும், ஒன்று முன்பக்கத்திலும் உள்ளன. பின்புறத்தில் உள்ள முதன்மை கேமராவில்  f/1.8 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் portrait shots-க்கு 2 மெகாபிக்சல் depth சென்சார் உள்ளது. முன்பக்க கேமரா, waterdrop-style notch வைக்கப்பட்டுள்ளது, 8 மெகாபிக்சல் பட சென்சார் உள்ளது.

Oppo A31-ன் இணைப்பு விருப்பங்களில் 4G/LTE, Wi-Fi மற்றும் Bluetooth 5.0 ஆகியவை அடங்கும். கூடுதலாக, MicroUSB port மற்றும் 3.5mm headphone jack உள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »