புதிய Oppo A31 ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதன் இடைப்பட்ட A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக இருக்கும். புதிய A31, 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A31-ல் இருந்து வேறுபட்டது. புதிய போன் இப்போது இந்தோனேசிய சந்தையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
Oppo A31 (2020) IDR 25,99,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,500) விலை மற்றும் இந்தோனேசிய சந்தையில் கிடைக்கிறது. இது Lazada, Shopee, Tokopedia, JD.ID, Blibli மற்றும் Akulaku உள்ளிட்ட ஆன்லைன் கடைகள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Mystery Black மற்றும் Fantasy White வண்ணங்களில் வழங்கப்படும்.
இப்போது மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
MediaTek Helio P35 பிராசசரால் இயக்கப்படுகிறது, இந்த டூயல்-சிம் (நானோ) Oppo A31 ஒரு இடைப்பட்ட பட்ஜெட் சாதனமாகும். இந்த போன் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Oppo A31, 6.5-inch HD+ (720x1,600 pixels) திரை, 4230mAh பேட்டரி மற்றும் rear fingerprint சென்சாரை பேக் செய்கிறது.
Oppo A31 (2020)-ல் உள்ள கேமராக்களுக்கு வருகையில், அவற்றில் மூன்று பின்புறத்திலும், ஒன்று முன்பக்கத்திலும் உள்ளன. பின்புறத்தில் உள்ள முதன்மை கேமராவில் f/1.8 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் portrait shots-க்கு 2 மெகாபிக்சல் depth சென்சார் உள்ளது. முன்பக்க கேமரா, waterdrop-style notch வைக்கப்பட்டுள்ளது, 8 மெகாபிக்சல் பட சென்சார் உள்ளது.
Oppo A31-ன் இணைப்பு விருப்பங்களில் 4G/LTE, Wi-Fi மற்றும் Bluetooth 5.0 ஆகியவை அடங்கும். கூடுதலாக, MicroUSB port மற்றும் 3.5mm headphone jack உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்