இந்தியாவில் விரைவில் வெளியாகிறது Oppo A31...! 

Oppo A31-ன் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 12 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் விரைவில் வெளியாகிறது Oppo A31...! 

Photo Credit: 91Mobiles

Oppo A31, Fantasy White மற்றும் Mystery Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Oppo A31, MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது
  • போனில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
  • இந்தியாவில் வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் & ஜியோ பலன்கள் வழங்கப்படும்
விளம்பரம்

Oppo A31 தற்போது இந்தோனேசியாவில் பல ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வருகிறது. ஒப்போவின் புதிய மிட் ரேஞ்சர் இப்போது இந்தியாவுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இந்த போன் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளது. Oppo A31-ன் இந்தியா வருகை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ டீஸரையும் நாங்கள் இதுவரை காணவில்லை. 

ஒரு சில்லறை விற்பனை நிலையத்திலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் தகவல்களின்படி, Oppo A31 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று 91Mobiles அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் Fantasy White மற்றும் Mystery Black கலர் ஆப்ஷன்களில் இந்த போன வாங்கலாம்.

இது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வகைகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் Oppo A31 விலையில் எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் இந்தோனேசிய சந்தைக்கான போனின் விலைக் குறி ஏதேனும் இருந்தால், அது இந்தியாவில் சுமார் ரூ.13,500-யாக நிர்ணயிக்கப்படும்.

oppo a31 Oppo A31

Oppo A31-ல் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Oppo A31, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Oppo A31 மார்க்கெட்டிங் பொருளின் கசிந்த படத்தின்படி, No-cost EMI ஆப்ஷன்களும் வழங்கப்படலாம். Jio கேஷ்பேக், ரூ.7,050 மதிப்புள்ள பலன்களையும் வழங்குகிறது.


Oppo A31 விவரக்குறிப்புகள்:

Oppo A31, 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது.

போனின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 12 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்பி மற்றும் வீடியோக்ளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Oppo A31-ல் 4,230mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது மற்றும் அங்கீகாரத்திற்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »