OnePlus 8-ன் விவரங்கள் வெளியாகின...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 பிப்ரவரி 2020 14:22 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus 8 GALILEI IN2025 குறியீட்டு பெயருடன் வெளிவந்ததாகத் தெரிகிறது
  • இந்த போன் 8 ஜிபி ரேமை கொண்டு வரலாம்
  • OnePlus 8 & OnePlus 8 Pro இரண்டும் தயாரிப்பில் இருக்கலாம்

OnePlus 8 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று வதந்தி பரவியுள்ளது

Photo Credit: OnLeaks/ CashKaro

அடுத்த தலைமுறை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனான OnePlus 8, கீக்பெஞ்சில் GALILEI IN2025 என்ற குறியீட்டு பெயருடன் வெளிவந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் போனின் சில விவரக்குறிப்புகள் பெஞ்ச்மார்க் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-க்கு வெளியே இயங்குவதாகத் தோன்றுகிறது மற்றும் பட்டியல் பிப்ரவரி 12-ஐ பதிவேற்றும் தேதியாகக் காட்டுகிறது. இருப்பினும், OnePlus 8-ன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தைப் பற்றி எந்த விவரங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆயினும்கூட, அமேசான் இந்தியா இணையதளத்தில் ஒரு துணைப் பக்கம் சமீபத்தில் OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro இரண்டையும் உருவாக்க பரிந்துரைத்தது.

OnePlus 8 என்று நம்பப்படும் GALILEI IN2025 என்ற குறியீட்டு பெயருடன் ஒரு ஸ்மார்ட்போனை, கீக்பெஞ்ச் பட்டியல் சிறப்பித்துக் காட்டுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் Android 10 போன்ற விவரக்குறிப்புகளையும் காட்டுகிறது. மேலும், போனில் SoC-யாக “கோனா” இருப்பதாகத் தெரிகிறது. அது Qualcomm Snapdragon 865​-யாக இருக்கலாம்.

கூடுதலாக, கீக்பெஞ்ச் பட்டியல் ஒற்றை கோர் மதிப்பெண் 4,276 மற்றும் மல்டி கோர் ஸ்கோர் 12,541 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சாதனம் ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடும் என்பதால் இவை ஸ்மார்ட்போனின் உண்மையான செயல்திறனை பிரதிபலிக்காது.

கடந்த மாதம், OnePlus 8 Pro​ எனக் கூறப்பட்ட கீக்பெஞ்ச் தளத்தில் GALILEI IN2023 என்ற குறியீட்டு பெயருடன் ஒரு ஸ்மார்ட்போன் தோன்றியது. இது புதிய மாடலில் 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 10-ஐ பரிந்துரைத்தது. மேலும், அந்த கீக்பெஞ்ச் பட்டியலில் ஸ்னாப்டிராகன் 865 SoC-யாக இருக்கக்கூடிய கோனா என்ற சிப்செட் குறியீட்டு பெயரும் அடங்கும்.

OnePlus 8 Pro மற்றும் OnePlus 8 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என்று வதந்திகள் பரவுகின்றன. அமேசான் இந்தியா வலைத்தளமும் சமீபத்தில் இணைந்த பக்கத்தின் மூலம் அவற்றின் இருப்பை பரிந்துரைத்தது. மேலும், புதிய OnePlus ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் மற்றும் 120Hz QHD+ Fluid டிஸ்பிளே அடங்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality
  • Vivid display
  • Excellent performance and software
  • Solid battery life
  • Decent camera performance
  • Bad
  • No IP rating or wireless charging
  • Low-light video could be better
  • 12GB variant isn’t great value
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 8 specifications, OnePlus 8, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  2. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  3. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  4. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  5. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
  6. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-ல என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க! ZEISS Kit கூட வருது
  7. Lava Agni 4: Home Demo Campaign மூலம் வாங்குவதற்கு முன் அனுபவம்!
  8. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  9. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  10. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.