OnePlus 8 ரூ.41,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஒன்பிளஸ் 8 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது
ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்கும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை மே 29 வெள்ளிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக உற்பத்தியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு விற்பனையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 8-ன் சிறப்பு லிமிடெட் விற்பனையை நடத்தியது. இந்த விற்பனை மே 29 அன்று அமேசான் இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஒன்பிளஸ் 8 ஸ்பெஷல் லிமிடெட் விற்பனையிலும் அமேசான் பல சலுகைகளை வழங்கியது. அவற்றில் ஒன்று எஸ்பிஐ கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.2,000 தள்ளுபடி.
OnePlus 8 ரூ.41,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் இந்தியாவில் Amazon.இன் நிறுவனத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.44,999-யாக உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 8 விலை ரூ.49,999 ஆகும்.
OnePlus 8, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 10-ல் இயங்கும். ஒன்பிளஸ் 8 -ல் 6.55 அங்குல FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஒன்பிளஸ் 8 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளது. மேலும், 2 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. ஒன்பிளஸ் 8 எடை 180 கிராம் ஆகும்.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts