வெளியானது ஒன்பிளஸ் 7T Pro-வின் புகைப்படங்கள், என்ன அம்சங்களை கொண்டுள்ளது?

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2019 14:29 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் 7T Pro-வின் புகைப்படங்கள் வெளியானது
  • ஸ்னேப்ட்ராகன் 855 ப்ளஸ் ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கலாம்
  • ஆண்ட்ராய்ட் Q அமைப்பு கொண்டு செயல்படுகிறது

ஒன்பிளஸ் 7 Pro கடந்த மே 17 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Photo Credit: Slashleaks

ஆறு மாத மேம்படுத்தல் சுழற்சியைப் பின்பற்றும் சில உற்பத்தியாளர்களில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த முதன்மை நிறுவனத்தின் T-தொடரில் உருவான ஒன்பிளஸ் 5T மற்றும் ஒன்ப்ளஸ் 6T ஆகிய ஸ்மார்ட்போன்களை நாம் கண்டுள்ளோம். தற்போது அந்த நிறுவனம் ஒன்பிளஸ் 7 Pro-வின் மேம்படுத்தப்ப்ட்ட வெர்ஷன் ஸ்மார்ட்போனின் தயாரிப்பை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது, மேலும் அந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7T Pro-வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன, இது ஒன்பிளஸ் 7T Pro தயாரிப்பு செயல்பாட்டில் உள்ளது என்பதை உணர்த்துகிறது. 

ஒன்பிளஸ் 7T Pro-வின் நேரடி படங்கள் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை மறைக்கக்கூடிய வகையிலான ஒரு கவரில் பொருத்தப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. வெளியான படத்தில் இருந்து, இந்த ஸ்மார்ட்போன் எந்த ஒரு நாட்ச் மற்றும் ஹோல்-பன்ச் கேமராக்கள் இல்லாமல் முன்புறம் முழுவதும் திரையாகவே அமைந்துள்ளது என்பது தெரிகிறது. மேலும் அந்த ஸ்மார்ட்போன் பொருத்தப்பட்ட கவரின் மேல் பகுதியில் இரண்டு துளைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த ஸ்மார்ட்போம் பாப்-அப் செல்பி கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது. மற்றொரு ஸ்மார்ட்போன், மைக்ரோபோனிற்காக இருக்கலாம்.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தினால் இந்த ஸ்மார்ட்போன் வளைந்த திரையை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் , இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்ட் Q அமைப்பு கொண்டு செயல்படுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.

இன்னும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ளஸ் ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 3T, ஒன்பிளஸ் 5T மற்றும் ஒன்ப்ளஸ் 6T ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை வைத்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 7T Pro, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  2. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  3. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  4. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
  5. ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா? OnePlus-ன் 'New Watch' டீஸர்! 5800 ரூபாய் டிஸ்கவுன்ட்
  6. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  7. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  8. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  9. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
  10. Redmi K90 Ultra: 165Hz Display, 8000mAh Battery உடன் அம்சங்கள் லீக்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.