தீபாவளி கொண்டாட்டம் முடிந்த பின் அடுத்த மாத தொடக்கத்தில் நுபியா ரெட் மேஜிக் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இசட்.டி.இ-யின் துணை நிறுவனமான நுபியா கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹை-எண்ட் கேமர்ஸை குறிவைத்தது, இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் ரெட் மேஜிக்கினை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, தகவல்களை வெளியிட்டது. தீபாவளிக்கு பின் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நுபியா ரெட் மேஜிக்கின் விலை ரூபாய் 30,000 இருக்குமென்று கேட்ஜெட் 360 அறிந்துள்ளது.
நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போனின் அறிமுக விலை இந்தியாவில் ரூபாய் 30,000 இருக்குமென்று தெரிகிறது. தீபாவளிக்கு பிறகு இந்த போன் விற்பனைக்கு வருமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. நுபியா ரெட் மேஜிக்கின் சீன விலை சி.என்.ஒய் 2,499(ரூ. 26,400) ஆக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட் போன் 6ஜி ரேம்/ 64ஜிபி சேமிக்கும் திறனைக் கொண்டது. 8ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட நுபியா ரெட் மேகிக்கின் விலை 31,600 ஆகும்.
இதில் டூயல் சிம் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும். 5.99 இன்ச் மற்றும் 18:9 என்ற விகித்தில் ஹெச்.டி திரை உள்ளது. 835 SoC குவால்கம் ஸ்னாப்டிராகன் அட்ரீனோவுடன் இணைந்து 540 ஜிபியூ இயங்குகிறது. யூ.எப்.எஸ் 2.1ன் 128ஜிபி உள் கட்ட சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது.
நுபியா ரெட் மேஜிக்கின் பின்புறம் 24 மெகா பிக்சல் கேமிரா சென்சார் உள்ளது. f/1.7, பிக்சலின் அளவு 0.9 மைக்ரான், 4k வீடியோ ரெக்கார்டிங்கை 30fps என்ற கணக்கில் சப்போர்ட் செய்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் 8மெகா பிக்சல் செல்பி கேமிரா உள்ளது. இதன் பிக்சலின் அளவு 1.12 மைக்ரான் ஆகும். 3,800 mAh பேட்டரி, நியோ பவர் 3.0 அதி வேக ஜார்ஜிங் திறன் கொண்டது. யூ.எஸ்.பி சி- டைப் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், சுற்றுச் சூழல் ஒளி உணரி, எலக்ட்ரோனிக் காம்பஸ், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கிரையோஸ்கோப்பைக் கொண்டுள்ளது. இதன் எடை 185 கிராம்கள் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்