நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்! 

நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்! 

ரெட் மேஜிக் 5 ஜி மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
 • நுபியா ரெட் மேஜிக் 5ஜி அறிவிக்கப்பட்டுள்ளது
 • இது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டைக் கொண்டுள்ளது
 • ரெட் மேஜிக் 5ஜி இரண்டு பொத்தான்களுடன் வருகிறது

நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் இறுதியாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் Hacker Black, Mars Red, Cyber Neon, அதே நேரத்தில் transparent பதிப்பு என மூன்று கலர் ஆப்ஷன்கள் உள்ளன.


நுபியா ரெட் மேஜிக் 5ஜி: விலை

Nubia Red Magic 5G, 8 ஜிபி + 128 ஜிபி, 12 ஜிபி + 128 ஜிபி, 12 ஜிபி + 256 ஜிபி, இறுதியாக 16 ஜிபி + 256 ஜிபி மாடல் ஆகிய நான்கு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன. முதல் அல்லது அடிப்படை மாடலின் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,300), இரண்டாவது வேரியண்ட்டின் விலை CNY 4,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,500), மூன்றாவது வேரியண்டின் விலை CNY 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,700) மற்றும் டாப்-எண்ட் வேரியண்டின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000)-யாக உள்ளது. சுவாரஸ்யமாக, Hacker Black கலர் ஆப்ஷன் டாப்-எண்ட் மாடலுடன் கிடைக்கவில்லை மற்றும் Mars Red ஆப்ஷன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 128 ஜிபி வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. Cyber Neon ஆப்ஷன் 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் transparent ஆப்ஷன் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டுடன் மட்டுமே கிடைக்கிறது. அதன் விலை CNY 4,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48,800) ஆகும்.

ரெட் மேஜிக் 5ஜி சீன சந்தையில் ஜிங்டாங் மால் இணையதளத்தில் CNY 100 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,000) வைப்புடன் முன் விற்பனைக்கு உள்ளது. இது மார்ச் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் வெய்போ பக்கம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்து எந்த தகவலும் இல்லை.


நுபியா ரெட் மேஜிக் 5ஜி: விவரக்குறிப்புகள்

டூயல்-சிம் ரெட் மேஜிக் 5ஜி, ரெட் மேஜிக் ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.65 அங்குல AMOLED FHD + திரை (1080 x 2340 பிக்சல்கள்) 144Hz அல்ட்ரா-ஹை ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்தையும் 240Hz ஸ்கிரீன் டச் ரிப்போர்டிங் வீதத்தையும் கொண்டுள்ளது. இது 19.5: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் Adreno 650 GPU-ஆல் இயக்கப்படுகிறது. 8 ஜிபி, 12 ஜிபி, மற்றும் 16 ஜிபி உள்ளிட்ட மூன்று LPDDR5 இரட்டை சேனல் ரேம் உள்ளமைவுகள் உள்ளன.

பின்புறத்தில் மூன்று உள்ளன, இதில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார், 8 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் சென்சார் இரண்டாம் நிலை ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன. நுபியா ரெட் மேஜிக் 5ஜி-யில் உள்ள செல்ஃபி ஷூட்டர் f/2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் லென்ஸ் ஆகும்.

நுபியா ரெட் மேஜிக் 5ஜி, 128 ஜிபி அல்லது 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை விரிவாக்கம் செய்ய முடியாது. இணைப்பிற்காக, இந்த போன் 5G support, Wi-Fi 6, GPS, Bluetooth மற்றும் 3.5mm headphone jack உடன் வருகிறது. இதில் இன்-டிஸ்பிளே கைரேகை ரீடரும் உள்ளது. இந்த போன் 55W ஏர்-கூல்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டது. 55W 10A-ல் ரெட் மேஜிக் 5ஜி சார்ஜில் இருக்கும்போது 15 நிமிடங்களில் போனை 56 சதவீதம் சார்ஜ் செய்யும் என்று Nubia கூறுகிறது.

இந்த போன் 168.56x78x9.75 மிமீ அளவும், 218 கிராம் எடையிலும் வருகிறது.  நுபியா ரெட் மேஜிக் 5ஜியில் geomagnetic சென்சார், gyroscope acceleration சென்சார் மற்றும் ambient light சென்சார் உள்ளது. 1 கிராம் அல்ட்ரா-லைட் விசிறியுடன் காற்று மற்றும் திரவ-குளிரூட்டப்பட்ட இரட்டை குளிரூட்டும் முறையையும் நுபியா சேர்த்தது, இது அதிக வெப்பத்தைத் தடுக்க 15,000 ஆர்.பி.எம் வரை சுழற்றக்கூடியது. ரெட் மேஜிக் 5ஜியில் 300Hz தொடு மாதிரி விகிதத்துடன் இரண்டு ஐசி பொத்தான்கள் உள்ளன, இது சிறந்த கேமிங் அனுபவத்தை அனுமதிக்கிறது. 

Advertisement
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2022. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com