நோக்கியா X7 படம் கசிந்தது; நோக்கியா பீனிக்ஸ் என்று கிசுகிசுக்கப்பட்டது இதுவே என தகவல்

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 24 ஆகஸ்ட் 2018 11:56 IST
ஹைலைட்ஸ்
  • அண்மையில் கசிந்த படங்களின்படி நோக்கியா எக்ஸ் 7 தயாரிப்பில் உள்ளது
  • கிசுகிசுக்கப்பட்ட போன்தான் இது என்றும் கூறப்படுகிறது
  • X7 என்று எதிர்பார்க்கப்படும் இப்போனும் டிஸ்பிளே நாட்ச் கொண்டிருக்கிறது

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிப்பில் உள்ளதாகச் சொல்லப்படும் Nokia X7

இரு தினங்களுக்கு முன்புதான் இந்தியாவில் நோக்கியா 5.1 ப்ளஸ் (X5), நோக்கியா 6.1 (X6) ப்ளஸ் ஆகிய போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 5.1+ இன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லையெனினும்; 6.1+ இன் விலை 15,999ரூ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக கசிந்துள்ள ஒரு படத்தால் நோக்கியா X7 போனும் தயாரிப்பில் இருப்பதை ஊகிக்க முடிகிறது. மேற்கூறப்பட்ட இரு மாடல்களைப் போலவே X7உம் திரையின் மேல்நடுப்பகுதியில் சிறுவெட்டு (display notch) அமைந்த வடிவத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இதுபற்றி கூடுதல் தகவல்கள் தற்போதைக்கு தெரியவில்லை.  

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரிபவர் வாயிலாக அண்மையில் கசிந்துள்ள படங்களின்படி, அதில் உள்ளது X7 போன்தான் என்று கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் ஏற்கனவே இதன் தயாரிப்பைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. வெளியான படத்தை வைத்துப் பார்க்கும்போது, இதன் திரை அளவு 6 இன்ச்சுக்குக் கூடுதலாக இருக்கும் என்றும் உருவ விகிதம் (aspect ratio) 19:9 ஆக இருக்கும் என்றும் கணிக்கமுடிகிறது.

மேலும் சில தகவல்களின்படி சில மாதங்கள் கழித்து வெளியிடவுள்ள நோக்கியா பீனிக்ஸ் (Nokia Phoenix) போன்தான் இது என்றும் கூறப்படுகிறது. நோக்கியா பீனிக்ஸ், நோக்கியா X7 என்று எல்லாம் கூறப்படும் இந்த போனின் விலை 20,400 ரூபாயாக இருக்கலாம். செப்டம்பர் 15ஆம் தேதியில் வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் முழுமையாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரும் வரும் செய்திகள் அல்ல என்பதால் இவற்றை அப்படியே நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.