Nokia 7.1, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. HMD குளோபல் கடந்த வாரம் Nokia 9 PureView-வுக்கு சமீபத்திய மென்பொருளை வெளியிட்டது, இப்போது Nokia 7. 1 பயனர்களும் அதைப் பெறுகின்றனர். ஆண்ட்ராய்டு 10 புதிய UI, சிறந்த உள்ளுணர்வு சைகைகள் மற்றும் பல செயலி கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. Nokia 9 PureView, Nokia 8.1, மற்றும் Nokia 7.1 ஆகியவை ஆண்ட்ராய்டு 10-ஐ Q4 2019-க்குள் பெறும் என்று HMD குளோபல் உறுதியளித்திருந்தது, இப்போது மூன்று போன்களும் அப்டேட்டைப் பெற்றுள்ளன.
ட்விட்டரில் Nokia 7.1-க்கான ஆண்ட்ராய்டு 10 ரோல்அவுட்டின் தொடக்கத்தை எச்எம்டி குளோபல் சிபிஓ ஜூஹோ சர்விகாஸ் (HMD Global CPO Juho Sarvikas) உறுதிப்படுத்தினார். இந்த அப்டேட் பெரும்பாலும் தொகுதிகளில் (over-the-air OTA)-ஐ வெளியிடுகிறது, எனவே எல்லா Nokia 7.1 போன்களும் இப்போதே அப்டேட்டைப் பெறாது. நீங்கள் ஏற்கனவே அறிவிப்பைப் பெறவில்லை எனில், அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. Settings > About Phone > System updates > புதுப்பிப்பை கைமுறையாகப் பார்க்க Check for update-க்கு செல்லவும்.
ட்விட்டரில் பயனர்கள் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, Nokia 7.1 அப்டேட் 1274.7MB அளவு, மற்றும் பதிப்பு எண் 4.08B ஆகும். போனின் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டில் dark mode, Smart Reply feature, gesture navigation, privacy & location-க்காக additional controls மற்றும் November Android Security patch ஆகியவை அடங்கும் என்றும் ஸ்கிரீன் ஷாட்கள் தெரிவிக்கின்றன.
Nokia 7.1 கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பல விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளது. கடைசி விலைக் குறைப்புக்குப் பிறகு, Nokia 7.1 இப்போது ரூ. 12.999-யாக விலையிடப்படுள்ளது.
அடுத்த மாதத்தில் Nokia 6.1, Nokia 6.1 Plus, Nokia 7 Plus போன்ற பிற போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை வெளியிடுவதாக எச்எம்டி குளோபல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் முதல் காலாண்டில் Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 மற்றும் Nokia 4.2-ஐ எட்டும். அதன் பிறகு, இது Nokia 1 Plus, Nokia 5.1 Plus மற்றும் Nokia 8 Sirocco-வுக்கு அனுப்பப்படும்.
ரோட்மேப்பில் Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 மற்றும் Nokia 1 ஆகியவை அடங்கும், இந்த நான்கு போன்களும் 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்ட்ராய்டு 10-ஐப் பெறும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்