ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது தயாரிப்புகளான நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7.1, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு மார்ச் அப்டேட்டை வழங்க உள்ளது. எல்லா அப்டேட்களும் V3.51F கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இந்த அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் இந்த தயாரிப்புகளின் அனைத்து உரிமையாளர்களுக்கும் சென்றடைந்துவிடும். இந்த அப்டேட் மூலம் சில மென்பொருள் அப்டேட்களும், பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி இதுபோன்ற அப்டேட் ஈராக்கிலும் வெளியாகியுள்ளது எனப்படுகிறது.
நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7.1 (ரூ.18,988), நோக்கியா 6.1 (ரூ.10,999) தயாரிப்புகளுக்கு ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கிறது. நோக்கியா 1, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் நிலையில் இன்னும் புதிய மென்பொருள் அப்டேட்டை ஹெஎம்டி நிறுவனம் வழங்கவில்லை.
வெளியாகியுள்ள அப்டேட்களைப் பெறுவதற்கு தேவைப்படும் டேட்டா அளவுகள்:
மார்ச் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பாட்ச் அப்டேட் போன்களின் திட நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. இந்த அப்டேட் அமெரிக்காவிலும் வெளியாகும் நிலையில் சரியான தேதி இன்னும் அறிவிப்பு செய்யப்படவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்