நோக்கியா 7.1 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது தூய்மையான டிஸ்பிளே பேனல். பிரைமரி ஹைலைட் மற்றும் ஹெச்டிஆர் 10-ஐ சப்போர்ட் செய்கிறது. 18W வேகமாக சார்ஜ் ஏறக்கூடிய தொழில்நுட்பத்துடன் 3.060mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது. இன்று HMD குளோபல் நோக்கியா 7.1ன் விலை, விற்பனை தேதி மற்றும் ஆஃபர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் லண்டனில் நோக்கியா 7.1 அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே இந்தியாவில் நோக்கியா 7.1 அறிமுகத் தேதி பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் HMD குளோபலின் தலைமை நிர்வாகி மற்றும் துணைத் தலைவர் அஜய் மேத்தா நோக்கியா 7.1 குறித்து கூறுகையில், இந்தியாவில் இருக்கக்கூடிய எங்களுடைய வாடிக்கையாளர்கள் பலரும் வீடியோக்களை உருவாக்குவதிலும் அதை பார்ப்பதிலும் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
அதனால் தான் நோக்கியா 7.1ல் உள்ள Zeiss optics மற்றும் ப்யூர் டிஸ்பிளே தொழில்நுட்பம் வீடியோக்களை தெளிவாக பார்க்க உதவு புரிகின்றது.
இந்தியாவில் நோக்கியா 7.1 4ஜிபி ரேம்/64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனி விலை ரூ.19,999 ஆகும். டிசம்.7 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
இந்த ஸ்மார்ட்போனினை அனைத்து விற்பனையாளர்களிடமும் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. நோக்கியா ஆன்லைன் ஸ்டோரிலும் பெறலாம். லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட 3ஜிபி ரேம்/ 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை.
நோக்கியா 7.1ன் அறிமுக தள்ளுபடியாக ஏர்டெல்லுடன் இணைந்து 1டிபி, 4ஜி டேட்டா ரூ. 199க்கு கொடுக்கிறது. போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் 120ஜிபி டேட்டா உடன் 3 மாதத்திற்கு நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைமின் சப்ஸ்கிரிப்ஷனை பெறுவார்கள்.
ஹெச்டிஎஃப்சி-யின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டினை பயன்படுத்துபவர்கள் 10 சதவீத கேஷ்பேக்கினை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நோக்கியா 7.1ல் டூயல் சிம்களை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு ஓரியோவில் இயங்கும் ஆனால், விரைவில் ஆண்ட்ராய்டு 9.0 பைக்கு நோக்கியா 7.1 அப்டேட் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
5.84 இன்ச் ஹெச்டி மற்றும் 19:9 என்ற வீதத்திலான ப்யூர் ஹெச்டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 636SoCல் இயங்குகிறது. 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரினைக் கொண்டுள்ளது. 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜூடன், 400ஜிபி வரை மைக்ரோSD கார்டினை பயன்படுத்தும் வசதியையும் பெற்றுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்