நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாக உள்ளது. இன்று வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு தொடர்ச்சியாக பல டீசர்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது நோக்கியா நிறுவனம். அப்படி இன்று வெளியாக உள்ள இந்த போனில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன.
இந்த மொபைல்போன் முதன்முதலில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம், பார்சிலோனாவில் நடந்த மொபைல் உலக கங்கிரஸ் (Mobile World Congress) கண்காட்சியில் வெளியிடப்பட்டது. பின்க் நிற வண்ணத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த மொபைல்போன் இந்தியாவிலும் அதே வண்ணத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், பவர் பட்டனில் LED நோட்டிபிகேசன் லைட் ஆகியனவற்றுடன் வெளிவரும் என முன்னதாகவே நோக்கியா இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தது.
எச்.எம்.டி குலோபல் என்ற நோக்கியா நிறுவனத்தை சார்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு டீஸ்ரில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நோக்கியா 4.2 பின்க் நிறத்தில்தான் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் ஒன் (AndroidOne) செயல் திட்டத்தை கொண்டு வெளியாக உள்ள இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன், இரண்டு பின்புற கேமரா, கைரேகை சென்சார், கூகுல் அசிஸ்டன்ட் பட்டன், பவர் பட்டனில் LED நோட்டிபிகேசன் லைட் என பல அம்சங்களுடன் வெளியாகும் என நோக்கியா நிறுவனம் முன்னதாக வெளியிட்ட பல டீஸர்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த போன், ரெட்மி நோட் 7 Pro, ரியல்மி 3 Pro, சாம்சங் கேலக்ஸி M30 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது என்ன கூகுள் அசிஸ்டன்ட் பட்டன்?
இந்த ஆண்டு நடந்த மொபைல் உலக கங்கிரஸ் (Mobile World Congress) கண்காட்சியில் இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள எல் ஜி, நோக்கியா, சியோமி மற்றும் விவொ ஆகிய நிறுவனங்களில் இதன்பின் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இந்த பட்டன் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் விளக்கப்படி இந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் கூகுள் அசிஸ்டன்ட் செயல்படுவதுடன், இரண்டு முறை அழுத்தினால் உங்கள் வார்த்தைகளை கவணிக்கும் என கூறியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, உருது, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளை அது அடையாளப்படுத்திக் கொள்ளும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நோக்கியா 4.2-வின் எதிர்பார்க்கப்படும் விலை
அதிகாரபூர்வமாக நோக்கியா நிறுவனம் தன் ஸ்மார்ட்போனான நோக்கியா 4.2 மொபைலை இன்றைக்கு இந்தியாவில் வெளியிட உள்ளது. இதன் விலை அப்போது அறிவிக்கப்படும் என்றாலும், உலக மார்க்கெட்டில் உள்ள இதன் விலையை வைத்து எந்த விலைக்கு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சந்தைபடுத்தப்படும் என்பதை தோராயமாக அறிந்து கொள்ளலாம். 2GB + 16GB மற்றும் 3GB + 32GB என இரண்டு வகைகளில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் உலக சந்தை விலை $ 169 டாலர்கள் மற்றும் $ 199 டாலர்கள். இதனை வைத்து ஒப்பிட்டு பார்க்கையில், 2GB + 16GB வகை கொண்ட நோக்கியா 4.2 Rs.11,700-க்கும், 3GB + 32GB வகை கொண்ட நோக்கியா 4.2 Rs.13,800 ஆகிய விலைகளில் அல்லது அதற்கு நெருக்கமான விலைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 4.2-வின் அம்சங்கள்
இரண்டு நானோ சிம்கார்டுகள் வசதியுடன் வெளியாக இருக்கும் இந்த நோக்கியா 4.2 ஆண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) வசதியுடன் வெளியாக உள்ளது. 5.71 இன்ச் HD+ திரை, 720x1520 பிக்சல்கள், 19:9 திரை விகிதம் மற்றும் 2.5D வளைந்த கண்ணாடி பாதுகாப்பு என அட்டகாசமான திரை அம்சங்களுடன் வெளியாகிறது. இந்த நோக்கியா 4.2. ஸ்னேப்ட்ராகன் 439 செயலி கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன். 2GB + 16GB மற்றும் 3GB + 32GB என இரண்டு வகைகளில் வெளியாகும். இந்த ஸ்மார்ட்போனில் 400GB வரை செமிப்பு அளவை அதிகப்படுத்திக்கொள்ளும் மைக்ரோ SD கார்டு வசதியும் உள்ளது.
இதன் கேமரா வசதிகளை பற்றி கூறவேண்டுமென்றால், இரண்டு பின்புற கேமராக்களையும் ஒரு முன்புற கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 13MP மற்றும் 2MP என இரண்டு பின்புற கேமராக்களும், 8MP முன்புற செல்பி கேமராவும் பொருத்தப்பட்டு வெளியாக உள்ளது இந்த நோக்கியா 4.2
3000mAh பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்போனின் அளவு 148.95x71.30x8.39mm. மேலும் 4G LTE வசதி, வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 வசதி என மற்ற மொபைல்போன்கள் போன்றே அம்சங்களை கொண்டு வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்