நோக்கியா 4.2 ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு v2.290 ஆகும். இதன் அளவு 1.38 ஜிபி ஆகும்.
நோக்கியா 4.2 பயனர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்று அப்டேட்டை பெறுவார்கள்
Nokia 4.2 பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வந்துவிட்டது. இந்த அப்டேட் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும். அப்டேட்டின் வெளியீடு ஏப்ரல் 14-க்குள் நிறைவடையும்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட், system-wide dark mode, gesture navigation மற்றும் smart reply ஆகிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இந்த அப்டேட் மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. இந்த அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு v2.290 ஆகும். இதன் அளவு 1.38 ஜிபி ஆகும். அனைத்து நோக்கியா 4.2 பயனர்களும் Settings-க்கு சென்று அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்கலாம். மேலும், போன் சார்ஜில் இருக்கும் போது, ஒரு நல்ல வைஃபை இணைப்பு மூலம் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட், ஆர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கம்போடியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ் (ஆரஞ்சு எஃப்ஆர் தவிர), ஜார்ஜியா, ஹாங்காங், ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, கஜகஸ்தான், குவைத், லாவோஸ், லாட்வியா, லிபியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மக்காவ், மலேசியா, மங்கோலியா, மொராக்கோ, நெதர்லாந்து, நோர்வே, ஓமான், போர்ச்சுகல், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, ஸ்பெயின், சுவீடன், தாய்லாந்து, துனிசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரைன், அமெரிக்கா மற்றும் யேமன் ஆகிய இடத்தில் உள்ள நோக்கியா 4.2 பயனர்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video