4,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது Nokia 2.3! 

Nokia 2.3-ஐ ஆண்ட்ராய்டு 10 ஆக மேம்படுத்த HMD குளோபல் உறுதியளித்துள்ளது.

4,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது Nokia 2.3! 

Nokia 2.3, portrait mode-ஐ ஆதரிக்கும் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Nokia 2.3, MediaTek Helio A22 SoC மூலம் இயக்கப்படுகிறது
  • இது ஒரு பிரத்யேக Google Assistant பொத்தானைக் கொண்டுள்ளது
  • Nokia 2.3-யின் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்
விளம்பரம்

HMD குளோபலின் சமீபத்திய நுழைவு நிலை ஆண்ட்ராய்டு போனான Nokia 2.3 இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அது இப்போது இறுதியாக இந்திய சந்தைக்கு வந்துள்ளது. ஃபின்னிஷ் (Finnish) நிறுவனம் Nokia 2.3-ஐ இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


இந்தியாவில் Nokia 2.3-யின் விலை, சலுகைகள்:

இந்தியாவில் Nokia 2.3-யின் 2GB + 32GB வேரியண்டின் விலை ரூ. 8,199-யாக உள்ளது. இது டிசம்பர் 27 முதல் அதிகாரப்பூர்வNokia India e-shop, authorised retail stores, Croma, Reliance, Sangeetha, Poorvika, Big C மற்றும் நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து கிடைக்கும்.

Nokia 2.3-ஐ வாங்கும் தற்போதைய அல்லது புதிய ஜியோ சந்தாதாரர்கள் ரூ. 7,200 மதிப்புள்ள ஜியோ பலன்களை பெறுவார்கள். இந்த பலன்கள் ஜியோவிடம் இருந்து ரூ. 2,200 கேஷ்பேக், ஜூம்காரில் (Zoomcar) இருந்து ரூ. 2,000 மதிப்புள்ள தள்ளுபடி மற்றும் ரூ. கிளியார்ட்ரிப்பிலிருந்து (Cleartrip) ரூ. 3,000 மதிப்புள்ள வவுச்சர்கள் அடங்கும்.

போனில் வழங்கப்படும் ஓராண்டு மாற்று உத்தரவாதத்தைப் பொறுத்தவரை, Nokia 2.3-ஐ அடுத்த ஆண்டு மார்ச் 31 அல்லது அதற்கு முன்னர் வாங்கும் வாடிக்கையாளர்கள் நோக்கியா மொபைல் கேர் விற்பனை நிலையங்களிலிருந்து ஏதேனும் ஒரு வன்பொருள் செயலிழப்பு அல்லது போனில் உற்பத்தி குறைபாட்டைக் கண்டால் புதிய அலகு பெறலாம். கூடுதலாக, வாங்குபவர்களுக்கு குறைபாடுள்ள பாகங்கள், மென்பொருள் சிக்கல்களுக்கும் 6 மாத பாதுகாப்பு கிடைக்கும்.


Nokia 2.3-யின் விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Nokia 2.3, Android 9.0 Pie-ஐ ஃபூட் செய்கிறது, கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது - அதன் புதுப்பிப்புக்கு காலவரிசை வழங்காமல், ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 தயாராக உள்ளது என்று HMD குளோபல் கூறியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 19:9 aspect ratio உடன் 6.2-inch HD+ (720x1520 pixels) in-cell டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2GB RAM உடன் இணைக்கப்பட்டு quad-core MediaTek Helio A22 SoC-யால் இயக்கப்படுகிறது.

Nokia 2.3-ன் இரட்டை-பின்புற கேமரா அமைப்பில், f/2.2 aperture 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் இணைந்து 2 மெகாபிக்சல் depth சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு f/2.4 உடன் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (400 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது.

Nokia 2.3-யில் 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது, இது ஒரு hybrid dual-SIM உள்ளமைவில் microSD card வழியாக (400 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரியிலிருந்து இயங்குகிறது, அதனுடன் 5W சார்ஜர் உள்ளது. அர்ப்பணிப்புள்ள Google Assistant key தவிர, நோக்கியா 2.3 சிறந்த பிடியில் 3D நானோ அமைப்புடன் durable polymer body-ஐக் கொண்டுள்ளது என்று HMD குளோபல் கூறுகிறது.

Nokia 2.3 First Impressions

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »