இந்த போனின் விலை EUR 109 (சுமார் ரூ. 8,600) மற்றும் இது ஒரு கேமரா மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது.
Nokia 2.3-யின் விலை EUR 109 (சுமார் ரூ. 8,600)
Nokia 2.3-ஐ கடந்த வாரம் கெய்ரோவில் (Cairo) HMD குளோபல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இப்போது, நோக்கியா மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் உள்ள டீஸர்கள், Nokia 2.3-ன் வெளியீடு விரைவில் நாட்டில் நடப்பதைக் காணலாம். இந்த போனின் விலை EUR 109 (சுமார் ரூ. 8,600) மற்றும் இது ஒரு கேமரா மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது.
Nokia 2.3 இந்திய வெளியீடு டீசர்:
நோக்கியா மொபைல் இந்தியா ட்விட்டரில் வெளியிட்ட இரண்டு குறுகிய டீஸர் வீடியோக்களின்படி, கேள்விக்குரிய சாதனம் உண்மையில் Nokia 2.3 என்று யூகிக்க முடியும். முதல் டீஸரைப் பொறுத்தவரை, வரவிருக்கும் நோக்கியா போன் சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும். இரண்டாவது டீஸர் போனின் கேமரா செயல்திறனும் சிறப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இப்போது Nokia 2.3-ஐ நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட, கேமரா சார்ந்த பட்ஜெட் போனாக HMD குளோபல் விற்பனை செய்கிறது. இந்த குறுகிய டீஸர் வீடியோக்கள், இந்தியாவில் Nokia 2.3 அறிமுகம் உண்மை என்று யூகிக்க முடிகிறது.
Nokia 2.3-யின் சிறப்பம்சங்கள்:
நினைவுகூர, Nokia 2.3-ஐ கடந்த வாரம் கெய்ரோவில் (Cairo) HMD Global அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் 19:9 aspect ratio உடன் 6.2-inch HD+ (720x1520 pixels) in-cell டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், teardrop notch உள்ளது. போனில் f/2.4 aperture உடன் 5-megapixel முன் கேமராவைக் கொண்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Nokia 2.3, MediaTek Helio A22 SoC-யால் இயக்கப்படுகிறது. இதனுடன் 2GB RAM மற்றும் 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. hybrid இரட்டை சிம் உள்ளமைவில், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (400 ஜிபி வரை) இன்பில்ட் ஸ்டோரேஜை விரிவாக்க முடியும். மென்பொருளை பொறுத்தவரை, இந்த போன் Android 9.0 Pie-ல் இயங்குகிறது.
Nokia 2.3-யின் டூயல் கேமரா அமைப்பில் 2-megapixel depth சென்சாருடன் இணைக்கப்பட்டு f/2.2 aperture உடன் 13-megapixel முதன்மை கேமராவை உள்ளடக்கியது. மற்ற முக்கிய விவரக்குறிப்புகளில் 4,000mAh battery, 3.5mm headphone jack மற்றும் பிரத்யேக Google Assistant பொத்தான் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation