ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா 2.3!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2020 14:30 IST
ஹைலைட்ஸ்
  • நேபாளம் & பங்களாதேஷ் பயனர்களும் ஆண்ட்ராய்டு 10-ஐப் பெறுகின்றனர்
  • இந்த அப்டேட்டில் டார்க் மோட், ஸ்மார்ட் ரீப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன
  • முதல் கட்டத்தின் ஒரு பகுதி ஏப்ரல் 26-க்குள் ஆண்ட்ராய்டு 10-ஐப் பெறும்

நோக்கியா 2.3 டிசம்பர் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது

நோக்கியா 2.3 அறிமுகப்படுத்தி நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட், 10 சதவிகித மக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் முதல் கட்டத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் வெளியிடப்படும் என்று HMD Global-ன் பணியாளர் ஒருவர் நோக்கியா 2.3 சமூக மன்றத்தில் அறிவித்தார். 


அப்டேட்டின் விவரங்கள்:

Nokia 2.3 பயனரால் ட்விட்டரில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டின் அடிப்படையில், இந்த அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு v2.230 ஆகும். இது 1.1 ஜிபி அளவில் கிடைக்கிறது. 


அப்டேட்டின் சிறப்பம்சம்:

Android 10 அப்டேட்டில், டார்க் மோட், ஸ்மார்ட் ரீப்ளே, சைகை வழிசெலுத்தல் மற்றும் தனியுரிமை மற்றும் இருப்பிடத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பும் உள்ளது.


போனின் விவரங்கள்:

Nokia 2.3, கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் MediaTek Helio A22 SoC செயலியுடன் 2 ஜிபி ரேம் உள்ளது. போனின் டூயல் ரியர் கேமராவில், 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை உள்ளன. செல்பிக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த போன் Android 9 Pie-ல் வேலை செய்தது.

உங்கள் சாதனத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை சரிபார்க்க, Settings > About phone > System updates-க்கு செல்ல வேண்டும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Global, Nokia, Android 10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க WhatsApp அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு! Strict Account Settings மோட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
  2. Moto G67 Power 5G: 7000mAh Battery & Snapdragon 7s Gen 2 உடன் இந்தியாவில் அறிமுகம்!
  3. Motorola Edge 70: 5.99mm Slim Profile, Snapdragon 7 Gen 4 உடன் அறிமுகம்
  4. OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்
  5. Lava Agni 4: 7000mAh Battery & Aluminium Frame உடன் நவம்பர் 20-ல் அறிமுகம்
  6. 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்! பட்ஜெட் செக்மெண்ட்ல Realme C85-ன் அதிரடி
  7. Vivo Y19s 5G: 6000mAh Battery & Dimensity 6300 உடன் இந்தியாவில் அறிமுகம்
  8. Oppo Reno 15, Pro, Mini: 200MP கேமரா & Dimensity 8450 உடன் டிசம்பரில் அறிமுகம்
  9. ஃப்ளாக்ஷிப் கில்லர் Poco திரும்பி வந்துட்டான்! F8 Ultra மற்றும் Pro பற்றி வெளியான அதிரடி லீக்ஸ்
  10. Samsung-ன் அடுத்த மிரட்டல் A சீரிஸ் போன்! Galaxy A57 Test Server-ல Spotted
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.