நோக்கியா 2.3 அறிமுகப்படுத்தி நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட், 10 சதவிகித மக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் முதல் கட்டத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் வெளியிடப்படும் என்று HMD Global-ன் பணியாளர் ஒருவர் நோக்கியா 2.3 சமூக மன்றத்தில் அறிவித்தார்.
Nokia 2.3 பயனரால் ட்விட்டரில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டின் அடிப்படையில், இந்த அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு v2.230 ஆகும். இது 1.1 ஜிபி அளவில் கிடைக்கிறது.
Android 10 அப்டேட்டில், டார்க் மோட், ஸ்மார்ட் ரீப்ளே, சைகை வழிசெலுத்தல் மற்றும் தனியுரிமை மற்றும் இருப்பிடத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பும் உள்ளது.
Nokia 2.3, கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் MediaTek Helio A22 SoC செயலியுடன் 2 ஜிபி ரேம் உள்ளது. போனின் டூயல் ரியர் கேமராவில், 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை உள்ளன. செல்பிக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த போன் Android 9 Pie-ல் வேலை செய்தது.
உங்கள் சாதனத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை சரிபார்க்க, Settings > About phone > System updates-க்கு செல்ல வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்