நெக்சஸ் 6P போன் வைத்திருக்கிறீர்களா..? - உங்களுக்கு கூகுள் காசு கொடுக்க வாய்ப்புள்ளது!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 12 ஏப்ரல் 2019 16:44 IST
ஹைலைட்ஸ்
  • அமெரிக்காவில் நெக்சஸ் 6P பயனர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்
  • அதைத் தொடர்ந்துதான் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
  • அமெரிக்க நெக்சஸ் 6P பயனர்களுக்குத் தற்போது இழப்பீடு வழங்கப்படலாம்

தி வர்ஜ் தளத்தில் உடன்படிக்கை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது

உங்களது நெக்சஸ் 6P போனில் பேட்டரி பிரச்னை அல்லது பூட்லூப் பிரச்னை இருக்கிறது என்றால், உங்களுக்கு கூகுல் மற்றும் ஹூவேய் நிறுவனம் சுமார் 400 டாலர் வரை இழப்பீடு கொடுக்க வாய்ப்புள்ளது. இந்திய மதிப்புப்படி இது 26,600 ரூபாய் ஆகும். நெக்சஸ் 6P போன் பயனர்கள், அமெரிக்காவில் தங்கள் போனில் இருந்த பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தற்போது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கைப்படி, கூகுள் மற்றும் ஹூவேய் நிறுவனங்கள், 67.39 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு அமெரிக்காவில் 2015, செப்டம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் நெக்சஸ் 6P போன் வாங்கியவர்களுக்கு இந்த இழப்பீடுத் தொகை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்சஸ் 6P போனில் பேட்டரி பிரச்னை மற்றும் பூட்லூப் பிரச்னை இருந்தது குறித்து பல பயனர்கள் 2016 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தி வர்ஜ் தளத்தில் உடன்படிக்கை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின்படி, பேட்டரி மற்றும் பூட்லூப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள  நெக்சஸ் 6P பயனர்களுக்குத் தலா 400 டாலர் வரை இழப்பீடு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

நெக்சஸ் 6P போனுக்கு பதிலாக பிக்சல் XL போனை வாரன்டி எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கிய பயனர்களுக்கு உடன்படிக்கையின்படி, 700 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றும், பூட்லூப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு 22,500 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பேட்டரி பிரச்னையால் பாதிக்கப்பட்ட போன்களுக்கு 10,400 ரூபாய் வரை தரப்படும் எனப்படுகிறது. 

அதே நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்து சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால்தான், மேற் குறிப்பிட்டுள்ள தொகை வழங்கப்படும். சரியான ஆவணங்கள் சமர்பிக்க முடியாமல் தவிக்கும் நெக்சஸ் 6P பயனர்களுக்கு சுமார் 5,200 ரூபாய் வரைதான் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த உடன்படிக்கையானது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே செல்லுபடியாகும். அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் நெக்சஸ் 6P பயனர்கள் தற்போதைக்கு எந்தவித இழப்பீட்டையும் பெற முடியாது.

2016 ஆம் ஆண்டு, கூகுள் நெக்சஸ் 6P போனில், ஹூவேய் நிறுவனம் வடிவமைத்த ஆண்ட்ராய்டு 7.0 நவுகட் அப்டேட் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பிரச்னைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great design and build
  • Fantastic display
  • Excellent camera
  • Blazing performance and software
  • Good battery life
  • Bad
  • No expandable storage
  • Expensive
  • No wireless charging
 
KEY SPECS
Display 5.70-inch
Processor Qualcomm Snapdragon 810
Front Camera 8-megapixel
Rear Camera 12.3-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3450mAh
OS Android 6.0
Resolution 1440x2560 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nexus 6P, Google, Huawei
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  2. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  3. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  4. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  5. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
  6. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  7. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  8. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  9. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  10. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.