தி வர்ஜ் தளத்தில் உடன்படிக்கை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது
உங்களது நெக்சஸ் 6P போனில் பேட்டரி பிரச்னை அல்லது பூட்லூப் பிரச்னை இருக்கிறது என்றால், உங்களுக்கு கூகுல் மற்றும் ஹூவேய் நிறுவனம் சுமார் 400 டாலர் வரை இழப்பீடு கொடுக்க வாய்ப்புள்ளது. இந்திய மதிப்புப்படி இது 26,600 ரூபாய் ஆகும். நெக்சஸ் 6P போன் பயனர்கள், அமெரிக்காவில் தங்கள் போனில் இருந்த பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தற்போது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கைப்படி, கூகுள் மற்றும் ஹூவேய் நிறுவனங்கள், 67.39 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு அமெரிக்காவில் 2015, செப்டம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் நெக்சஸ் 6P போன் வாங்கியவர்களுக்கு இந்த இழப்பீடுத் தொகை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்சஸ் 6P போனில் பேட்டரி பிரச்னை மற்றும் பூட்லூப் பிரச்னை இருந்தது குறித்து பல பயனர்கள் 2016 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தி வர்ஜ் தளத்தில் உடன்படிக்கை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின்படி, பேட்டரி மற்றும் பூட்லூப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நெக்சஸ் 6P பயனர்களுக்குத் தலா 400 டாலர் வரை இழப்பீடு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நெக்சஸ் 6P போனுக்கு பதிலாக பிக்சல் XL போனை வாரன்டி எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கிய பயனர்களுக்கு உடன்படிக்கையின்படி, 700 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றும், பூட்லூப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு 22,500 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பேட்டரி பிரச்னையால் பாதிக்கப்பட்ட போன்களுக்கு 10,400 ரூபாய் வரை தரப்படும் எனப்படுகிறது.
அதே நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்து சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால்தான், மேற் குறிப்பிட்டுள்ள தொகை வழங்கப்படும். சரியான ஆவணங்கள் சமர்பிக்க முடியாமல் தவிக்கும் நெக்சஸ் 6P பயனர்களுக்கு சுமார் 5,200 ரூபாய் வரைதான் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையானது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே செல்லுபடியாகும். அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் நெக்சஸ் 6P பயனர்கள் தற்போதைக்கு எந்தவித இழப்பீட்டையும் பெற முடியாது.
2016 ஆம் ஆண்டு, கூகுள் நெக்சஸ் 6P போனில், ஹூவேய் நிறுவனம் வடிவமைத்த ஆண்ட்ராய்டு 7.0 நவுகட் அப்டேட் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பிரச்னைகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்