Android 10 அப்டேட் பெறும் Motorola One Power!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 12 டிசம்பர் 2019 13:17 IST
ஹைலைட்ஸ்
  • அப்டேட், பிழை திருத்தங்களை கொண்டு வந்து நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது
  • இது staged manner-ல் வெளிவருகிறது, இது முடிவடைய ஒரு மாதம் ஆகும்
  • Motorola One Power, 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது

Motorola One Power Android 10 அப்டேட் வெளியீடு அனைத்து பயனர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது

Motorola One Power இப்போது ஆண்ட்ராய்டு 10 நிலையான அப்டேட்டைப் பெறுகிறது. ஷோஸ்டாப்பர் பிழைகள் ஏதும் ஏற்படாமல், இந்த அப்டேட் பயனர்களுக்கு அரங்கேற்றப்படும். ரோல்அவுட் முடிவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது, மேலும் 2020 ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து சாதனங்களையும் அடைய வேண்டும் என்று மோட்டோரோலா கூறுகிறது. இந்த அப்டேட், இதுவரை பெறாத அனைத்து பயனர்களுக்கும், சமீபத்திய டிசம்பர் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. Motorola One Power-ன் சமீபத்திய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட system stability-யும் கொண்டுவருகிறது.

Motorola One Power-க்கான ஆண்ட்ராய்டு 10 நிலையான அப்டேட்டின் வெளியீடு தொடங்கியுள்ளதாக மோட்டோரோலா தனது பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய அப்டேட்டுக்கான உருவாக்க எண் QPT30.61-18. இந்த போன் சமீபத்தில் இந்தியாவில் டிசம்பர் பாதுகாப்பு பேட்சைப் பெற்றது, இன்னும் கிடைக்காத பயனர்கள் அனைவருக்கும் இந்த சமீபத்திய அப்டேட் மூலம் கிடைக்கும்.

Motorola One Power வைத்துள்ள அனைவருமே, Settings > System > Advanced > System updates-க்குச் சென்று அப்டேட்டுகளை மேனுவலாக சரிபார்க்கலாம். ஒரு நல்ல வைஃபை இணைப்பு வழியாகவும், போன் சார்ஜில் இருக்கும்போதும் அப்டேட்டை நிறுவ பரிந்துரைக்கிறோம். நீங்கள் அப்டேட்டைப் பெறவில்லை என்றால், அது ஜனவரி 10-க்கு முன் வரும்.


Motorola One Power-ன் விவரக்குறிப்புகள்:

Motorola One Power செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அதன் விலை ரூ. 15,999. முக்கிய அம்சங்களில் 6.2-inch full-HD+ டிஸ்பிளே, Snapdragon 636 SoC, டூயல் கேமரா அமைப்பு, 12-megapixel செல்ஃபி சென்சார் ஆகியவற்றுடன் 4GB RAM இணைக்கப்பட்டுள்ளது. மேலும், rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது, 15W TurboPower fast-charger-ஐப் பயன்படுத்தி 15 நிமிடங்களில் ஆறு மணிநேர பயன்பாட்டை வழங்க மதிப்பிடப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Decent build quality
  • Supplied Turbocharger
  • Bad
  • Low-light camera performance could be better
  • No video stabilisation
  • Lacks dual 4G
  • Heavy and bulky
 
KEY SPECS
Display 6.20-inch
Front Camera 12-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0
Resolution 1080x2246 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola One Power, Motorola One Power Update, Android 10, Motorola
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.