Motorola One Power இப்போது ஆண்ட்ராய்டு 10 நிலையான அப்டேட்டைப் பெறுகிறது. ஷோஸ்டாப்பர் பிழைகள் ஏதும் ஏற்படாமல், இந்த அப்டேட் பயனர்களுக்கு அரங்கேற்றப்படும். ரோல்அவுட் முடிவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது, மேலும் 2020 ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து சாதனங்களையும் அடைய வேண்டும் என்று மோட்டோரோலா கூறுகிறது. இந்த அப்டேட், இதுவரை பெறாத அனைத்து பயனர்களுக்கும், சமீபத்திய டிசம்பர் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. Motorola One Power-ன் சமீபத்திய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட system stability-யும் கொண்டுவருகிறது.
Motorola One Power-க்கான ஆண்ட்ராய்டு 10 நிலையான அப்டேட்டின் வெளியீடு தொடங்கியுள்ளதாக மோட்டோரோலா தனது பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய அப்டேட்டுக்கான உருவாக்க எண் QPT30.61-18. இந்த போன் சமீபத்தில் இந்தியாவில் டிசம்பர் பாதுகாப்பு பேட்சைப் பெற்றது, இன்னும் கிடைக்காத பயனர்கள் அனைவருக்கும் இந்த சமீபத்திய அப்டேட் மூலம் கிடைக்கும்.
Motorola One Power வைத்துள்ள அனைவருமே, Settings > System > Advanced > System updates-க்குச் சென்று அப்டேட்டுகளை மேனுவலாக சரிபார்க்கலாம். ஒரு நல்ல வைஃபை இணைப்பு வழியாகவும், போன் சார்ஜில் இருக்கும்போதும் அப்டேட்டை நிறுவ பரிந்துரைக்கிறோம். நீங்கள் அப்டேட்டைப் பெறவில்லை என்றால், அது ஜனவரி 10-க்கு முன் வரும்.
Motorola One Power செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அதன் விலை ரூ. 15,999. முக்கிய அம்சங்களில் 6.2-inch full-HD+ டிஸ்பிளே, Snapdragon 636 SoC, டூயல் கேமரா அமைப்பு, 12-megapixel செல்ஃபி சென்சார் ஆகியவற்றுடன் 4GB RAM இணைக்கப்பட்டுள்ளது. மேலும், rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது, 15W TurboPower fast-charger-ஐப் பயன்படுத்தி 15 நிமிடங்களில் ஆறு மணிநேர பயன்பாட்டை வழங்க மதிப்பிடப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்