வருகின்ற சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் நிறுவனம் மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதி ஒரு சிறப்பு சேலை நடத்த திட்டமிட்டுள்ளது.
நடக்கவிருக்கும் இந்த இரண்டு நாள் சேலில், பல முன்னணி நிறுவனங்களின் சமீபத்திய தயாரிப்புகளான ஹானர் 9N, நோக்கியா 6.1 பிளஸ், சாம்சங் கேலக்ஸி நோட் 8 மற்றும் விவோ வி9 ப்ரோ ஆகிய போன்கள் தள்ளுபடியில் விற்பனைக்கு வரவுள்ளன.
மேலும் போகோ F1, சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் மோட்டோரோலா ஓன் பவர் ஆகிய போன்களும் இந்த தள்ளுபடி சேலில் இடம்பெற்றுள்ளன.
இந்த அதிரடி ஃபிளிப்கார்ட் சேலில் எலக்டிரானிக் தயாரிப்புகளான (மடிக்கணினிகள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பவர்பேங்க்) போன்றவைகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது. மேலும் பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா தவணைத்திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.
ஃபிளிப்கார்ட் சேலின் தள்ளுபடி விலைகள்:
இந்த சேலில் ஹானர் 9N ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கும், நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.13,999க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் தனது அறிமுக விலையின ரூ.15,499-யிலிருந்து குறைந்து தற்போது ரூ.13,990க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த ஃபிளிப்கார்ட் சேலில் சாம்சங் கேலக்ஸி 8 (ரூ.30,990)க்கும், ரியல்மி 2 (14,496)க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு எஃக்ஸ்சேஞ்சு ஆஃபர்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதால் இந்த போனுக்கான எதிர்பார்புக்கள் அதிகரித்துள்ளது.
இன்ஃபினிட்டி நோட் 5 தனது அறிமுக விலையான ரூ.9,999லிருந்து குறைந்து ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL போன்களும் தள்ளுபடி விலையில் பெறலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் டீல்கள் மற்றும் ஓப்போ போன்களின் தள்ளுபடி ஆஃபர்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் கசிந்துள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் இந்த சேலில் போன்கள் மட்டுமின்றி மடிக்கணினிகளையும் விற்பனை செய்கிறது. ரூ. 12,990 முதல் துவங்கும் இந்த மடிக்கணினிகளின் தள்ளுபடிகள் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சுமார் 75% வரை தள்ளுபடி கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்துடன் ஓவ்வொரு மணிநேரமும் ஓஎம்ஜி சேல்களும், எட்டுமணிநேரத்துக்கும் பிளாக்பஸ்டர் சேல்களும் நடக்கவுள்ளது. இப்படி பல வகையான உட்தள்ளுபடிகள் நடக்கவிருக்கும் இந்த சேல் வரும் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்