வியாழக்கிழமையன்று, தனது புதிய ஸ்மார்ட்போனான, மோட்டோ Z4-ஐ அறிமுகம் செய்துள்ளது. தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது, மோடோ நிறுவனம். மற்ற Z- தொடர்கள் பொன்றில்லாமல், இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், இதற்கு முந்தைய ஸ்மார்ட்போன்களில் இடம் பெற்றிருந்த 'மோடோ மோட்' இடம்பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின், விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!
மோட்டோ Z4: விலை!
499 டாலர்கள் (34,900 ரூபாய்) துவக்க விலையில் விற்பனையாகவுள்ள இந்த மோட்டோ Z4, 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்பொனின் முன்பதிவு, இப்போதே நடைபெறுகிறது. கனடாவில் பின்னர் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோட்டோ Z4, சாம்பல் (Flash Grey) மற்றும் வெள்ளை (Frost White) வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
மோட்டோ Z4: சிறப்பம்சங்கள்!
அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படும் மோட்டோ Z4 ஸ்மார்டபோனின் அமெரிக்க வெர்சனில், ஒரு நானோ சிம் வசதி மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், இதன் இந்திய மட்டும் சீன வெர்சன்கள் இரண்டு நானோ சிம் வசதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன், 6.40-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 19.5:9 என்ற அளவிலான திரை விகிதத்தை கொண்டுள்ளது.
4GB RAM கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பின்புற கேமரா மட்டுமே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 25 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
3,600mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு, 15W டர்போ சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.இது டைப்-C சார்ஜ் போர்ட் கொண்டுள்ளது. 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டு வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
158x75x7.35mm என்ற அளவிலான இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போன், 165 கிராம் எடை கொண்டுள்ளது. 128GB சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 2TB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்