5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி 8 பவர் லைட் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 மே 2020 13:13 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோ ஜி 8 பவர் லைட் முதல் விற்பனை மே 29 மதியம் 12 மணிக்கு தொடங்கும்
  • புதிய மோட்டோரோலா போன் பிளிப்கார்ட் வழியாக வழங்கப்படும்
  • மோட்டோ ஜி 8 பவர் லைட் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ராயல் ப்ளூ வண்ணங்களில் வழங்கப்படும்

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி 8 பவர் லைட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போன் ஏப்ரல் மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போனில் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது.


போனின் விலை:

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Moto G8 Power Lite-ன் விலை ரூ.8,999 ஆகும். இந்த போன் மே 29 மதியம் 12 மணிக்கு Flipkart-ல் விற்பனைக்கு வரும். இந்த போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ராயல் ப்ளூ வண்ணங்களில் வருகிறது.

பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை மூலம் மோட்டோ ஜி 8 பவர் லைட் வாங்குவோருக்கு 5 சதவீதம் அன்லிமிடெட் கேஷ்பேக் கிடைக்கும். மேலும், பல EMI ப்ளான்களும் உள்ளன.

போனின் விவரங்கள்:

மோட்டோ ஜி 8 பவர் லைட் ஆண்ட்ராய்டு பையில் இயங்குகிறது. இது 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 16 மெகாபிக்சல் ஷூட்டர், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2- மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனரும் உள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட்டின் எடை 200 கிராம் ஆகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Water-repellent design
  • Good battery life
  • Clutter-free Android experience
  • Bad
  • Cameras struggle in low light
  • Display isn’t very bright
  • Slightly weak processor
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra வாங்க இதுதான் சரியான நேரம்! Flipkart-ல் அதிரடி விலை குறைப்பு + பேங்க் ஆஃபர்ஸ்
  2. HMD-யிடமிருந்து பட்ஜெட் விலையில் செம்ம தரமான TWS ஆடியோ சீரிஸ்! எக்ஸ்50 ப்ரோ முதல் பி50 வரை... முழு விவரம் இதோ
  3. ஸ்மார்ட்வாட்ச் உலகிற்குப் புதிய ராஜா வர்றாரு! Xiaomi Watch 5-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ முழு விவரம்
  4. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ? Nord 4 இப்போ செம்ம மலிவான விலையில Amazon-ல் கிடைக்குது
  5. ஒப்போ ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Find X8 Pro விலையை ₹19,000 வரை குறைச்சிருக்காங்க. இந்த டீலை விடாதீங்க மக்களே
  6. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  7. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  8. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  9. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  10. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.