பல புதிய அம்சங்களுடன் ஜூன் மாதத்தில் வெளியாகிறது MIUI 12! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 ஏப்ரல் 2020 10:38 IST
ஹைலைட்ஸ்
  • MIUI 12, text இடைவெளியுடன் புதிய தட்டையான & எளிய UI-ஐக் கொண்டுவருகிறது
  • புதிய Always On Display ஸ்டைல் சேர்க்கப்பட்டுள்ளன
  • MIUI 12 multi-window ஆதரவைக் கொண்டுவருகிறது

MIUI 12 பூமி மற்றும் செவ்வாய் ஆகியவற்றைக் கொண்ட புதிய லைவ் வால்பேப்பர்களைக் கொண்டுவருகிறது

ஷாவ்மி தற்போது MIUI 12 மென்பொருளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய மென்பொருள் புதிய UI, புதிய அனிமேஷன்கள் மற்றும் தனியுரிமை மேம்பாடுகளுடன் வந்துள்ளது. புதிய ஆப்ஷனுடன் பல சுவாரஸ்யமான லைவ் வால்பேப்பர்கள் மற்றும் Always on Display அம்சம் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தனியுரிமை தொடர்பான அம்சங்கள் விரிவடைய, MIUI 12 உடன் Barbed Wire மற்றும் Mask System  வருகின்றன. இது தவிர, இந்த புதிய MIUI 12 ஜூன் மாதத்தில் முதல் கட்டமாக வெளியிடப்படும் என்று ஷாவ்மி அறிவித்துள்ளது.


MIUI 12 புதிய interface அம்சங்கள்:

MIUI 12-ன் interface முன்பை விட மிகவும் எளிமையானதாகிவிட்டது. இது வெள்ளை பின்னணியுடன் வருகிறது, இது ஸ்மார்ட்போனின் text-ஐ மேலும் எடுத்துக்காட்டுகிறது.

இது தவிர, text-ன் நடுவில் அதிக இடமும் காணப்படுகிறது. text-ஐ பூர்த்தி செய்ய கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. screen rotation, app launch and close மற்றும் முகப்புத் திரையில் மீண்டும் எழும் ஐகான் உள்ளிட்ட கணினி அனிமேஷனில் ஷாவ்மி மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 போன்ற வழிசெலுத்தல் சைகைகளையும் கொண்டுள்ளது.

MIUI 12 text உடன் புதிய காட்சிகளைக் கொண்டுவருகிறது

இது பூமி மற்றும் செவ்வாய் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புதிய லைவ் வால்பேப்பர்களை உள்ளடக்கியது. இந்த லைவ் வால்பேப்பர் மிகவும் தனித்துவமானது. இது செவ்வாய் கிரகத்தை தூரத்திலிருந்து காண்பிக்கும் மற்றும் இந்த செவ்வாய் கிரகத்தின் சிவப்பு பாறை நிலத்தை காண்பிக்க ஜூம் செய்கிறது. இதேபோல், பூமியின் லைவ் வால்பேப்பரை ஜூம் செய்வதன் மூலம், பூமியின் வெவ்வேறு இடங்களைக் காணலாம். டார்க் மோடைப் பயன்படுத்தி, இந்த கிரகங்கள் இரவில் நுழைந்து, இரவில் நீங்கள் இந்த கிரகங்களைப் பார்ப்பது போல் காட்சிகள் தோன்றும். MIUI 12-ல் நீங்கள் உகந்த மல்டி விண்டோ அம்சத்தைப் பெறுவீர்கள்.

MIUI 12 ஒரு புதிய செவ்வாய் லைவ் வால்பேப்பரைப் பெறுகிறது

MIUI 12 புதிய தனியுரிமை அம்சங்கள்:

'Android Enhanced Privacy Protection Test'-ல் தேர்ச்சி பெற்றதாக கூறி, ஷாவ்மி MIUI 12 உடன் தனியுரிமையை கவனித்துள்ளது. இது 'ஃப்ளேர்' என்ற புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது. ஒரு செயலி உங்கள் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்ஸைப் பயன்படுத்தும் போதெல்லாம், அது உங்களுக்கு ஒரு எச்சரிக்கையைக் காண்பிக்கும்.

MIUI 12 மற்ற புதிய அம்சங்கள்:

அதனுடன் தொடர்புடைய ஒரு புதிய சுகாதார அம்சமும் உள்ளது. இது அதிக பேட்டரியை எடுத்துகொள்ளாமல் நீங்கள் செய்த படிகள் மற்றும் பிற செயல்பாடுகளை பதிவு செய்யும். ஷாவ்மி நாள் முழுவதும் 1 சதவீத பேட்டரியை மட்டுமே பயன்படுத்தும் என்று கூறுகிறது. கேட்கவும் பேசவும் சிரமப்படுபவர்களுக்கு, இந்த MIUI 12 ஒரு புதிய AI அழைப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இது நிகழ்நேர பேச்சை மொழிபெயர்க்க வேலை செய்கிறது.

Advertisement

இந்த அம்சங்களைத் தவிர, MIUI 12 சீனாவில் வெளியிடப்படும் என்று ஷாவ்மி அறிவித்துள்ளது. முதல் கட்டம் ஜூன் மாதம் தொடங்கும். அதே நேரத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. முதல் கட்டத்தில், இந்த அப்டேட் Mi 10 Pro, Mi 10, Mi 9 Pro 5G, Mi 9, Redmi K30 Pro, Redmi K30, Redmi K20 Pro மற்றும் Redmi K20 ஆகியவற்றில் வெளியிடப்படும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: MIUI 12, MIUI 12 Features, MIUI 12 Rollout Timeline, Xiaomi, MIUI
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.