சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸில் வரவிருக்கும் "Privacy Display" அம்சம் குறித்து அதிகாரப்பூர்வ டீசர்கள் வெளியாகியுள்ளன.
Photo Credit: Samsung
Galaxy S26 Privacy Display: Anti-Shoulder Surfing தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது முழு
இன்னைக்கு நாம ஒரு செம இன்ட்ரஸ்டிங்கான விஷயத்தை பத்தி தான் பேசப்போறோம். பஸ்ஸுல அல்லது ட்ரெயின்ல டிராவல் பண்ணும்போது, நாம வாட்ஸ்அப்ல யாருக்காவது மெசேஜ் பண்ணிட்டு இருப்போம், இல்ல பேங்கிங் ஆப்ல ஏதோ செக் பண்ணிட்டு இருப்போம். அப்போ கரெக்டா நம்ம பக்கத்து சீட்ல இருக்குற யாராவது ஒருத்தர் நம்ம போனை "அப்படி ஒரு பார்வை" பார்ப்பாங்க. இத "Shoulder Surfing"னு சொல்லுவாங்க. இந்த தலைவலிக்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டு வரப்போறாங்க சாம்சங் (Samsung).
ஆமாங்க, அடுத்த மாசம் ரிலீஸ் ஆகப்போற Samsung Galaxy S26 சீரிஸ்ல (குறிப்பா S26 Ultra-ல) ஒரு மிரட்டலான "Privacy Display" வசதியை சாம்சங் டீஸ் பண்ணிருக்காங்க. இதுக்காக அவங்க சுமார் 5 வருஷம் கஷ்டப்பட்டு ரிசர்ச் பண்ணிருக்காங்களாம். பொதுவா நாம இதுக்குன்னு கடையில போய் "Privacy Tempered Glass" வாங்கி ஒட்டுவோம். ஆனா அதுல என்ன ஒரு மைனஸ்னா, போனோட பிரைட்னஸ் குறைஞ்சுடும், கலர் குவாலிட்டியும் சரியா இருக்காது. ஆனா சாம்சங் இதை போனோட டிஸ்ப்ளேலயே "இன்பில்ட்" ஆகக் கொண்டு வர்றாங்க.
இந்த டெக்னாலஜிக்கு பின்னாடி 'Flex Magic Pixel' அப்படிங்கிற ஒரு வித்தைய சாம்சங் வச்சிருக்காங்க. இது சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ரெண்டும் சேர்ந்து வேலை செய்யுற ஒரு விஷயம். நீங்க போனை நேரா வச்சு பார்க்கும்போது டிஸ்ப்ளே சூப்பர் கிளியரா தெரியும். ஆனா, உங்க போனுக்கு லெப்ட் சைடுலயோ இல்ல ரைட் சைடுலயோ யாராவது சாய்வா பார்த்தா, அவங்களுக்கு ஸ்கிரீன்ல இருக்குற கன்டென்ட் சுத்தமா தெரியாது, ஃபுல்லா பிளாக்கா தெரியும். இதுக்கு AI அல்காரிதம்களையும் சாம்சங் பயன்படுத்துறாங்க.
இல்லை மக்களே, இதுதான் இதுல இருக்குற ஸ்பெஷாலிட்டியே! இது ஒட்டுமொத்த ஸ்கிரீனுக்கும் "பிளாங்கெட்" போடாம, உங்களுக்கு எது தேவையோ அதுக்கு மட்டும் யூஸ் பண்ணிக்கலாம்.
● App-Specific: நீங்க பேங்கிங் ஆப் அல்லது மெசேஜிங் ஆப் ஓபன் பண்ணும்போது மட்டும் இது ஆட்டோமேட்டிக்கா ஆன் ஆகுற மாதிரி செட் பண்ணிக்கலாம்.
● Specific Area: உங்களுக்கு வர்ற நோட்டிபிகேஷன் பாப்-அப்களை மட்டும் மத்தவங்களுக்கு தெரியாம மறைக்க முடியும்.
● Manual Toggle: உங்களுக்கு எப்ப வேணுமோ அப்போ மட்டும் இத குயிக் செட்டிங்ஸ்ல போய் ஆன் அல்லது ஆஃப் பண்ணிக்கலாம்.
சாம்சங் சொல்றபடி, "நாக்ஸ் செக்யூரிட்டி" (Knox Security) கூட சேர்ந்து இந்த பிரைவசி லேயர் வர்றதுனால, உங்க பாஸ்வேர்ட் மற்றும் ஓடிபி (OTP) யாருக்கும் தெரியாது. அப்புறம் என்ன மக்களே, இனி பஸ்ஸுல மெசேஜ் பண்ணும்போது பக்கத்துல இருக்குறவங்க பாக்குறாங்களேன்னு பயப்படத் தேவையில்லை!
தற்போதைய தகவல்படி, இந்த செம ஃபீச்சர் Galaxy S26 Ultra மாடல்ல மட்டும் தான் வரும்னு ஒரு பேச்சு இருக்கு. S26 மற்றும் S26 Plus மாடல்களுக்கு வருமா இல்லையாங்கிறது பிப்ரவரி மாசம் நடக்குற அன்ஃபாக்டு (Unpacked 2026) ஈவென்ட்ல தெரிஞ்சிடும். கண்டிப்பா இந்த அம்சம் வந்தா, நாம தனித்தனியா பிரைவசி கிளாஸ் வாங்கி ஒட்ட வேண்டிய அவசியமே இருக்காது. இந்த டெக்னாலஜி பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது உங்களுக்கு தேவையா? கீழ கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்