MIUI 12 அப்டேட் பேட்ச் வாரியாக வெளியிடப்படுவதால், அனைத்து ரெட்மி நோட் 9 பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்காது.
MIUI 12 அப்டேட் 538MB அளவு உள்ளது
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் MIUI 11, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் அறிமுகமான நிலையில், தற்போது MIUI 12க்கான அப்டேட் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த வாரம் போகோ X2 ஸ்மார்ட்போனில் MIUI 12க்கான அப்டேட் வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனிலும் MIUI 12 அப்டேட் V12.0.1.0.QJOINXM உடன் வரத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட்டை பயனர் ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, MIUI 12 அப்டேட் 538MB அளவு உள்ளது. இதில் அனிமேஷன்கள், ஃபுளோட்டிங் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் விசுவல்ஸ் அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிமுறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
MIUI 12 அப்டேட் பேட்ச் வாரியாக வெளியிடப்படுவதால், அனைத்து ரெட்மி நோட் 9 பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்காது.
உங்கள் ரெட்மி நோட் 9 ஸ்மாரட்போனில் MIUI 12 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, Settings > About Phone > System update க்குச் சென்று பார்க்கவும்.
இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் MIUI 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 85 SoC பிராசசர் உள்ளது. மேலும் 6 ஜிபி ரேம், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள், சிங்கிள் ஹோல் பஞச் டிஸ்பிளே, 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங், 9W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected