சாம்சங் கேலக்ஸி A57 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் (Official Renders) தற்போது வெளியாகியுள்ளன. இந்த போனின் புதிய தோற்றம், கலர் ஆப்ஷன்கள் மற்றும் டெக்னிக்கல் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
Photo Credit: Samsung
கசிந்த Galaxy A57: 6.9mm ஸ்லிம், Exynos 1680, புதிய கேமரா டிசைன் விவரங்கள் முழு
இன்னைக்கு நம்ம டெக் உலகத்துல சாம்சங் பத்தின ஒரு செம சூப்பரான "Exclusive" அப்டேட் தான் பார்க்கப்போறோம். சாம்சங்-ல பட்ஜெட்ல ஒரு நல்ல போன், அதுவும் பார்க்க பிரீமியமா இருக்கணும்னா நம்ம எல்லாரும் கண்ணை மூடிக்கிட்டு 'A' சீரிஸைத் தான் தேடுவோம். அந்த வரிசையில இப்போ Samsung Galaxy A57 ஓட அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் (Renders) வெளியாகி இணையத்தை அதிர வச்சிருக்கு. இந்த போனோட புகைப்படங்களை பார்த்தாலே ஒன்னு தெளிவா தெரியுது - சாம்சங் இந்த வாட்டி டிசைன்ல பயங்கரமா மெனக்கெட்டு இருக்காங்க. முக்கியமா, இந்த போன் வெறும் 6.9mm தடிமன் தான் இருக்குமாம்! அதாவது, சாம்சங்-ஓட 'S' சீரிஸ் பிளாக்ஷிப் போன்களுக்கு இணையா ரொம்பவே ஸ்லிம்மா இதை கொண்டு வராங்க. போனோட எடை கூட வெறும் 182 கிராம் தான். கையில பிடிக்கும்போது ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் வச்சிருக்கிற மாதிரி அவ்வளவு லேசா இருக்கும்.
புகைப்படத்துல கவனிச்சீங்கன்னா, அந்த வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இருக்குற இடம் மட்டும் தனியா கொஞ்சம் துருத்திக்கிட்டு இருக்கும். இதை சாம்சங் 'Key Island'-னு சொல்றாங்க. இந்த வாட்டி அது இன்னும் கொஞ்சம் மெருகேறி 'Key Island 2.0'-வா வருது. இது போனுக்கு ஒரு யூனிக் லுக்கைத் தருது. போனோட பின்னாடி அந்த மூணு கேமராக்களும் தனித்தனியா "Floating" டிசைன்ல இருக்கு. இது பாக்குறதுக்கு S26 சீரிஸ் போன் மாதிரியே ஒரு பிரீமியம் ஃபீல் கொடுக்குது.
6.6 இன்ச் அளவுள்ள Super AMOLED டிஸ்ப்ளே இதுல வருது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்கறதால ஸ்க்ரோலிங் எல்லாம் செம ஸ்மூத்தா இருக்கும். லீக் ஆன தகவல்படி, இதுல சாம்சங்-ஓட புதிய Exynos 1680 சிப்செட் இருக்கப்போகுது. இது கூடவே 8GB அல்லது 12GB RAM வேரியண்ட்கள் வரும். கேமிங் விளையாடுறவங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, இதுல AMD-யுடன் இணைந்த கிராபிக்ஸ் கார்டு இருக்கலாம்னு ஒரு பேச்சு ஓடுது.
கேமராவைப் பொறுத்தவரை, 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 12MP அல்ட்ரா வைடு மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் இருக்கு. செல்ஃபிக்கு 12MP கேமரா முன்னாடி இருக்கு. பேட்டரி விஷயத்துல ஒரு பெரிய ஆச்சரியம் என்னன்னா, போன் இவ்வளவு ஸ்லிம்மா இருந்தாலும் 5000mAh பேட்டரியை உள்ள வச்சிருக்காங்க. அதுவும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டோட வருது.
அநேகமா இந்த பிப்ரவரி முதல் வாரத்துல அல்லது இரண்டாவது வாரத்துல இந்த போன் லான்ச் ஆகலாம். விலை ₹41,000 முதல் ₹45,000 வரை இருக்க வாய்ப்பு இருக்கு. IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் 6 வருஷ சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்-னு சாம்சங் இந்த வாட்டி வேற லெவல்ல பிளான் பண்ணிருக்காங்க.
என்ன நண்பர்களே, இந்த 'ஸ்லிம்' கேலக்ஸி A57 உங்களுக்கு பிடிச்சிருக்கா? இல்ல பழைய A56 டிசைனே நல்லா இருந்ததா? கீழ கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules