ஸியோமி நிறுவனத்தில் எம்ஐ ஏ2 போன் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தியாவில் அறிமுகம்

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 25 ஜூலை 2018 13:12 IST
ஹைலைட்ஸ்
  • ஸியோமி எம்ஐ ஏ2 போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது
  • இன்னும் இந்த போனில் விலை அறிவிக்கப்படவில்லை
  • இந்த போன் இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

ஸியோமி நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அதன் புதிய மாடலான எம்ஐ ஏ2 போனை விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸியோமி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனுகுமார் ஜெயின் பேசுகையில், ஸியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட மாடலான எம்ஐ ஏ2 விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி இதன் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த போன், டூயல் ரியர் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட்டும், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த போனில், 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.  ஸியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

இதில், 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பி கேமரா 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு ஸியோமி எம்ஐ ஏ2 வெளி வருகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  2. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  3. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  4. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  5. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
  6. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  7. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  8. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  9. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  10. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.