ஸியோமி நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அதன் புதிய மாடலான எம்ஐ ஏ2 போனை விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸியோமி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனுகுமார் ஜெயின் பேசுகையில், ஸியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட மாடலான எம்ஐ ஏ2 விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி இதன் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த போன், டூயல் ரியர் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஸியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட்டும், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த போனில், 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஸியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.
இதில், 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பி கேமரா 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு ஸியோமி எம்ஐ ஏ2 வெளி வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்