இந்தியாவில் எல்.ஜி நிறுவனத்தின் W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக எல்.ஜி நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் இந்த ஸ்மார்ட்போண் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். போர்ட்ரைட், போக்கே, நைட் மோட் மற்றும் வைட்-ஆங்கிள் என பல வசதிகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். இதில் W30, W30 Pro ஸ்மார்ட்போன்கள், வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் W10 ஸ்மார்ட்போன் சாதரான நாட்ச் திரை கொண்டு வெளியாகவுள்ளது. மேலும், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 4000mAh பேட்டரியுடன் வெளியாகவுள்ளது.
எல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை!
3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேல் ஜூலை 3 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
எல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் விலை மற்றும் விற்பனை தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.
எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்