LG W10 Alpha நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட LG W சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன், octa-core பிராசசர் மற்றும் RainDrop Notch டிஸ்பிளேவுடன் வருகிறது.
இந்தியாவில் LG W10 Alpha-வின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜின் விலை ரூ.9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, எல்ஜி இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு கலர் ஆப்ஷனில் மட்டுமே வருகிறது. மேலும், இது நாட்டின் ஆஃப்லைன் சில்லறை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
LG W10 Alpha-வை அறிமுகப்படுத்துவது குறித்த தெளிவுக்காக கேஜெட்ஸ் 360, LG India-வை அணுகியுள்ளது மற்றும் அதன் கிடைக்கும் தன்மையைப் புரிந்துகொள்கிறது. ஆகையால், நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடம் புதுப்பிக்கப்படும்.
நினைவுகூர, எல்ஜி கடந்த ஆண்டு LG W10, LG W30 மற்றும் LG W30 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது W சீரிஸை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. LG W10 இந்தத் சீரிஸில் மிகவும் மலிவு விலையில் உள்ளது - இதன் விலை ரூ.8,999 ஆகும்.
டூயல்-சிம் (நானோ) LG W10 Alpha, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது, 19:9 aspect ratio உடன் 5.7-inch HD+ (720x1520 pixels) Raindrop Notch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Unisoc (previously Spreadtrum) SC9863 SoC-யால் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் ஒற்றை, 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சாருடன் இந்த போன் வருகிறது.
LG W10 Alpha, 32GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (128GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.1, GPS/ A-GPS மற்றும் Micro-USB ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில், இந்த போனில் proximity சென்சார் உள்ளது. இதில் 3,450mAh lithium-polymer பேட்டரி உள்ளது.
தவிர, LG W10 Alpha, 147.3x71x8.9mm அளவீட்டையும், 170 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்