எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
4000mAh பேட்டரி, ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது எல்.ஜி W30
எல்.ஜி நிறுவனம் W-தொடரில் அறிமுகப்படுத்திய மூன்று ஸ்மார்ட்போன்களில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இன்று விற்பனையாகவுள்ள இந்த எல்.ஜி-யின் W10, W30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் இணைய தளத்தில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனையாகவுள்ளது. முன்னதாக, எல்.ஜி நிறுவனம் இந்தியாவில் W-தொடரில் W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போன்கள் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. போர்ட்ரைட், போக்கே, நைட் மோட் மற்றும் வைட்-ஆங்கிள் என பல வசதிகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். இதில் W30, W30 Pro ஸ்மார்ட்போன்கள், வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் W10 ஸ்மார்ட்போன் சாதரான நாட்ச் திரை கொண்டு வெளியானது. மேலும், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 4000mAh பேட்டரியுடன் வெளியானது.
இவற்றில் W10, W30 ஸ்மார்ட்போன்கள் இன்று விற்பனையாகவுள்ளது. இதனுடன் அறிமுகமான W30 Pro ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்களில் விலை!
3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இன்னும் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் எல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India
A Knight of the Seven Kingdoms OTT Release: Know When and Where to Watch This Prequel of Game of Thrones