எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2020 10:20 IST
ஹைலைட்ஸ்
  • LG Q51 தென் கொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது
  • இதன் விலை KRW 317,000 ஆகும்
  • LG Q51, பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

LG Q51, Frozen White மற்றும் Moonlight Titanium ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்

எல்ஜி தனது ஸ்மார்ட்போன்களின் ‘Q' வரிசையில் மற்றொரு சாதனமான LG Q51-ஐ சேர்த்துள்ளது. இந்த போன் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6.5 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது. இந்த போன் Frozen White மற்றும் Moonlight Titanium என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.


LG Q51 விலை: 

LG Q51 பிப்ரவரி 26, இன்று முதல் விற்பனைக்கு வரும். எல்ஜியின் அறிக்கையின்படி, இது மூன்று மொபைல் தகவல் தொடர்பு நிறுவனங்களால் விற்கப்படும். இதன் விலை KRW 317,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,700) ஆகும் மற்றும் தென் கொரியாவில் மட்டுமே கிடைக்கிறது, வெளி சந்தைகளில் கிடைப்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.


LG Q51 விவரக்குறிப்புகள்:

LG Q51, 2.0GHz ஆக்டா கோர் பிராசசரைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio P22 சிப்செட்டைக் கொண்டுள்ளது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ பட்டியல் போனின் ஒரே ஒரு வகையை மட்டுமே காட்டுகிறது, இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது, அவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. HD + தெளிவுத்திறனுடன் 6.5 அங்குல டிஸ்பிளேவும் கிடைக்கும்.

LG Q51, பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை 13 மெகாபிக்சல், மற்றொன்று 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வி-நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.

LG Q51-யின் இணைப்பிற்காக Wi-Fi, Bluetooth v5.0, NFC மற்றும் சார்ஜிங்கிற்காக USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த பட்டியலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 7.1 சேனல் DTS X 3D ஸ்டீரியோ சவுண்ட் இருப்பதாகவும் கூறுகிறது. LG Q51, இடதுபுறத்தில் பிரத்யேக Google Assistant பொத்தானைக் கொண்டுள்ளது.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor 2GHz octa-core
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG, LG Q51, LG Q51 price, LG Q51 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
  2. Samsung Galaxy ஸ்மார்ட்போன் விலைகள் இந்தியாவில் உயர்வு – பல மாடல்கள் பாதிப்பு
  3. Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம்.. அரசவைக்கு சிறப்பு அம்சங்கள்
  4. MacBook Neo அதிகாரப்பூர்வமாக அறிமுகம்: பட்ஜெட் விலை, நான்கு நிறங்கள் மற்றும் பல அம்சங்கள
  5. Google Pixel 10 சலுகை: ₹13,800-க்கும் அதிக தள்ளுபடி – எப்படி பெறுவது?
  6. Xiaomi 17T இந்தியாவில் வெளியாகும் நாள் இதுவா? Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகமாக தயாராகிறது
  7. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  8. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  9. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  10. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.