எல்ஜி தனது ஸ்மார்ட்போன்களின் ‘Q' வரிசையில் மற்றொரு சாதனமான LG Q51-ஐ சேர்த்துள்ளது. இந்த போன் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6.5 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது. இந்த போன் Frozen White மற்றும் Moonlight Titanium என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
LG Q51 பிப்ரவரி 26, இன்று முதல் விற்பனைக்கு வரும். எல்ஜியின் அறிக்கையின்படி, இது மூன்று மொபைல் தகவல் தொடர்பு நிறுவனங்களால் விற்கப்படும். இதன் விலை KRW 317,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,700) ஆகும் மற்றும் தென் கொரியாவில் மட்டுமே கிடைக்கிறது, வெளி சந்தைகளில் கிடைப்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.
LG Q51, 2.0GHz ஆக்டா கோர் பிராசசரைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio P22 சிப்செட்டைக் கொண்டுள்ளது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ பட்டியல் போனின் ஒரே ஒரு வகையை மட்டுமே காட்டுகிறது, இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது, அவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. HD + தெளிவுத்திறனுடன் 6.5 அங்குல டிஸ்பிளேவும் கிடைக்கும்.
LG Q51, பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை 13 மெகாபிக்சல், மற்றொன்று 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வி-நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.
LG Q51-யின் இணைப்பிற்காக Wi-Fi, Bluetooth v5.0, NFC மற்றும் சார்ஜிங்கிற்காக USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த பட்டியலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 7.1 சேனல் DTS X 3D ஸ்டீரியோ சவுண்ட் இருப்பதாகவும் கூறுகிறது. LG Q51, இடதுபுறத்தில் பிரத்யேக Google Assistant பொத்தானைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்