நடுத்தர பட்ஜெட் போனாக வெளியான ‘LG X4’- முழு தகவல் உள்ளே!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2019 12:55 IST
ஹைலைட்ஸ்
  • LG X4 (2019)-ல் கூகுள் லென்ஸ் இன்டக்ரேஷன் உள்ளது
  • LG X4 இரு வித வண்ணங்களில் கிடைக்கிறது
  • கொரியாவில் தற்போது இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

5.7 இன்ச் எச்.டி+ திரை கொண்ட இந்த போன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது.

எல்.ஜி நிறுவனம் நடுத்தர வாடிக்கையாளர்களை குறிவைத்து X4 (2019)-ஐ அறிமுகம் செய்துள்ளது. போன் மூலம் அதிகம் இசையை கேட்க விரும்புபவர்களுக்கு ஏற்றது போல் X4 வடிவமைக்கப்பட்டுள்ளது. X4-ல் இருக்கும் ஹை-ஃபை குவாட் டி.ஏ.சி சிறந்த இசையை கொடுக்கும். இதுவரை எல்.ஜி-யின் விலை உயர்ந்த போன்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு வசதி இருந்தது. தற்போது மிட் ரேஞ்ச் போனுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட X4 (2018)-ன் அடுத்த வெர்ஷனாக இந்த போன் வந்துள்ளது. 

எல்.ஜி X4 (2019) விலை:

கொரியாவில் வெளியான எல்.ஜி K12+ போலவே இந்த X4 காணப்படுகிறது. அதே நேரத்தில் எல்.ஜி K40-யின் சிறப்பம்சங்களை இந்த போன் ஒத்திருக்கிறது. இரண்டு போனுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரேம் திறன்தான். X4-ல் 2 ஜிபி ரேம் இருக்கிறது. K40-யில் 3 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  எல்.ஜி X4-ன் விலை 18,000 ரூபாய் இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் இந்த போன் கொரிய சந்தையில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்தியாவில் இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எல்.ஜி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. 

எல்.ஜி X4 (2019) சிறப்பம்சங்கள்:

நானோ டூயல் சிம் ஸ்லாட் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. 5.7 இன்ச் எச்.டி+ திரை கொண்ட இந்த போன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ P22 (MT6762) எஸ்.ஓ.சி மூலம் X4 பவரூட்டப்படுகிறது. 2 ஜிபி ரேம் சப்போர்ட்டுக்கு உள்ளது. ஆனால், இவை அனைத்தையும் விட இந்த போனின் அதிமுக்கிய வசதி, ஹை-ஃபை குவாட் டி.ஏ.சிதான். இந்த அம்சம்தான், போனில் இசை கேட்பதை மிகவும் ரம்மியமானதாக மாற்றும். 

கேமரா துறையைப் பொறுத்தவரை 16 மெகா பிக்சல் ரியர் கேமரா, 8 மெகா பிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளிட்டவைகள் படம் பிடிக்க இருக்கின்றன. 32 ஜிபி சேமிப்பு வசதியை X4 பெற்றுள்ளது. 

3,000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி X4 உடன் வருகிறது. மேலும் பின்புறம் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 


 

 
KEY SPECS
Display 5.70-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG, LG X4 2019, LG X4 2019 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.